நான் உதய் கிருஷ்ணா
மற்றவர்களுக்கு உதய்
அவளுக்கு ராட்சசன்...அன்னை எண்ணிலடங்கா சொத்துக்கு சொந்தக்காரி...
அதுக்கு காவலனாய் காதல் என்ற போர்வையில் வந்தான் தந்தை...
அதனாலே சிறுவயதிலே அவன்மேல் மரியாதை இழந்தேன்..
அவன்பிம்பமாய் வளர்க்க நினைக்க.. நானோ எதிரியாய் வளர்ந்தேன்...காதல் என்றாலே வெறுத்த நான் கன்னியவள் கடைக்கண் பார்வையில் விழுந்தேன்...
கவர்ந்திழுக்கும் திமிர்அழகு.., என்னைவிட.. என்னவள் ஆக்கிக் கொள்ள ஆசைப்பட்டேன்...
காதல்மனதை அன்னையிடம் சொல்ல, சூழ்ச்சியில் அயல்நாடு அனுப்பப்பட்டேன்...
கன்னியவளை தேடி நாடுதிரும்ப அவளை மாற்றான் மனைவியாய் கண்டேன்...உள்ளம் கொதித்தது... உயிரை வெறுத்து காரை செலுத்தினேன்..
உள்ளுக்குள் புதுவித வலி..,
உந்துதலில் காரை நிறுத்தினேன்
உணர்வுகொள்ளா ஒரு நிலை எனை நோக்கி ஒருவள் கரம் நீட்டினாள்..
உயிர் போக சொன்னது... அவளை கரத்தில் ஏந்தினேன்..உயிர்பிரியும் நிலை அவளுக்கு..
வேதனை மட்டும் கண்டது கண்கள் அவளிடம்..
உச்சந்தலை தடவி என்னில் சேர்க்க சொன்னது இதயம் என்னிடம்...
உறவாய் அவள் அம்மா என்றழைக்க நானே சென்றேன் அவளிடம்...
உள்ளம் வலிக்க, அவள் வேதனை கண்டு மொத்தமாய் இல்லை நானே என்னிடம்....ஏன் இந்த வலி என்று இல்லம் சென்றவன் நித்திரை இழந்தேன்...
ஏக்கமாய் இருந்தேன் விடியலில் அவளை காண செல்ல, சூரியனை எழுப்பினேன்...
ஏனோ தவித்தது மனம் சில நாட்களில் பழைய காதல் மறந்தேன்..
ஏகமாய் குற்றம் சாட்டியது மனது... அது காதலல்ல ஈர்ப்பு என அறிந்தேன்...அவள் வரலாறு அறிந்து மனம் நொந்தேன்...
அவள் சொந்தங்களுடன் சேர்ந்து வைத்தேன்...
அவள் என் தந்தையின் நண்பர் மகள் என அறிந்தேன்...
அவள் மனம் தெளிய என் அருகில் காரியதரசியாய் வைத்தேன்...என்னுள் காதல் விலைவாசியாய் உயர்ந்து எவரெஸ்ட் தொட்டது..
என்னவள் ஆக்கிக் கொள்ள மூளை என்னிடம் வாதாடியது...
நான் மட்டும் அவள் நினைவில் இருக்கனும் என மனம் எண்ணியது...
என்னிலை கண்டு பெற்றவர்கள் திருமணம் ஏற்பாடு செய்ய குதூகலித்தது...உற்சாகமாய் திரிந்த மனது ஒன்றை மறந்தது...
உள்ளன்போடு அவள் சம்மதித்தாளா என நினைக்க மறந்தது...
இரு தந்தைகளின் வியாபார ஒப்பந்தம்தான் இந்த திருமணம் என அறிந்தேன்...
இறுகிய மனதோடு அவள் காதலின் உயிர் காக்கவே என்னவள் ஆனாள் என அறிந்தேன்...இனி தினமும் அவளுடன் இனிய போராட்டங்கள் நடக்கும்...
இனியவனாய் என்னை ஏற்க காதல் யுத்தம் நடக்கும்..
இனிய விடியல்கள் மறைந்து அவளின் வெறுப்புடன் தொடங்கும்...
இறுமாப்புடன் என் காதல் உணர்த்த என் லீலைகள் தொடங்கும்...காதல் என்னும் போர்களத்தில் ..
அன்பு என்னும் ஆயுதத்தால் அவளை ஜெயிப்பேன்..
காதல் என்னும் ஆடுகளத்தில், சீண்டல் என்னும் அதிரடியால் அவளை ஜெயிப்பேன்...
காதல் என்னும் நதியில், அக்கறை என்னும் படகில் அவளை கரை சேர்ப்பேன்...
காதல் என்னும் தீயில், நான் குளித்து , அவளை தித்திக்கும் தீயாய் ஏற்பேன்...அவள் என்னுள் காதல் என்னும் வேள்வியில், வளர்க்கப்பட்ட தித்திக்கும் தீயே
BINABASA MO ANG
தித்திக்கும் தீயே...
General Fictionஅவள் காதல்தேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட காதல் அகதி.. அவள் மனம் உடல் இரண்டும் அவன் மட்டுமே உலகம் என்றிருக்க.. அந்த உலகமே வெறுக்கும் அபலை. இவள் வாழ்வில் இனிமை உதயமாகுமா.. இது என்னோட புது முயற்சி.. என் அடுத்த கதையின் கருவை கவிதை பாகங்களாக வெளியிட...