பழனி முருகன்

40 5 1
                                    

*சமீபத்தில் பழனி சென்ற போது அங்கு போகர் பெருமானுக்கு நித்ய பூஜை செய்யும் அன்பு நண்பர் போகர் வசீகரன் மூலமாக பல விடயங்களை பற்றி பகிர்ந்து கொண்டோம்..  அந்த தொகுப்பே  போகர் பெருமானை பற்றியும் அவரின் தனித்துவத்தை பற்றியும் உள்ள அபூர்வ ரகசியம் இதோ..... இன்று சித்தர்களின் குரலில்....*

சித்தர்கள் பூமியான பழனியின் ஆச்சரியம் மற்றும் அதிசயம் *அங்கு நிறுவப்பட்டிருக்கும் சிலையே...*

அப்படிப்பட்ட அற்புதச்சிலையை பிரதிஷ்டை செய்ததோடு மட்டுமல்லாமல் அதை செயல்பட வைக்க குரு பெருமான் தன ஜீவ மற்றும் ஆத்ம சக்தியை அதற்குள் பிரதிஷ்டை செய்தார்.

ஒரு நாள் இரண்டு நாள் அல்ல *200 வருடங்கள் அந்த மாபெரும் தவத்தை* செய்து நிறைவேற்றினார்.ஒரு துளியும் அளவு தப்பாத துல்லியம் என்பது  அந்த சிலையின் நிர்மாணத்தில் இருந்தது.பதினெட்டு சித்தர்களின் திறன்களும் அதில் அடங்கி இருந்தது.இந்த உலகின் பெரும்பகுதி அழிவு என்பது இந்த சிலையினால் காப்பாற்றும் அளவிற்கு அந்த சிலையானது அமைக்கப்பட்டது.

*இந்த சிலை என்ன செய்யும் என்று கேட்டால் ஆச்சரியம் கொள்வீர்கள்.*

நாம் சூப்பர் மார்க்கெட் போன்ற பகுதிகளுக்கு சென்றோமேயானால் கவனித்திருப்போம் ஒரு பொருளை வாங்கியவுடன் அதை பணம் செலுத்தும் இடத்திற்கு கொண்டு  சென்று அதை காட்டினால் அதில் உள்ள மின்னணு குறியீட்டை அந்த சிஸ்டம் படித்து பார்த்த உடனே அது தொடர்பான அனைத்துவிதமான தகவல்களையும் வெளியே கொண்டு வந்துவிடும்.அந்த நுணுக்கம் தான் இந்த சிலையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிலையின் முன்பாக யார் சென்றாலும் அது உடனே அவர்களின் எண்ணஅலைகளை படித்துவிடும். அதை அப்படியே திருப்பி பல மடங்காக தந்துவிடும். அதை தவிர அதற்கு வேறு எதுவும் தெரியாது. *நாம் அந்த சிலையின் முன்பாக சென்று கடந்து விட்ட அந்த நொடியே நாம் மாறியிருப்போம். அந்த மாற்றத்தை மட்டும் நாம் புரிந்திருக்கவே மாட்டோம்.*

 தமிழ் சிந்தனை துளிகள்Donde viven las historias. Descúbrelo ahora