கோயில்களில் கடவுள் சிலைகளை பெரும்பாலும் கருங்கல்லில் வடிக்கின்றனர் அது ஏன் என்பது பற்றி நமது ஓம் நமசிவாய குழுவின் மூலம் சிறு விளக்கம் :
ஒரு கல்லில் சிலை வடிப்பது எளிதான விஷயம் அல்ல. முறையான விரதம் இருந்து, அதற்கான கல்லினை தேர்வுச் செய்து, அந்த கல்லின் தனித்துவம் உணர்ந்து செய்ய வேண்டும்.
உழியினால் கல்லினை செதுக்கும் போது, ஒரு சிறு பிழை ஏற்பட்டாலும் அந்த கல் முற்றிலுமாக உடைந்து விடும்.
ஆகம விதிப்படி முறையாக பூஜைகள் செய்து வரும் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில் நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வத்தை நம்மால் உணரலாம்.
பெரும்பாலும் தெய்வச் சிலைளை உலோகங்களில் செய்யாமல், கருங்கல்லால் சிலை செய்கிறார்கள். அதற்கு முக்கியமான கரணம் உண்டு.
உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது.எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக் கொள்ளும் தன்மைஉடையது கருங்கல்.
கருங்கல் என்பது பஞ்ச பூதங்களையும் அடக்கும் தன்மையுள்ளது. இது வேறு எந்த உலோகத்திற்கும் கிடையாது.
*நீர்*
கல்லில் நீர் உள்ளது. எனவே தன் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது. கல்லில் நீருற்று இருப்பதை காணலாம்.
*நிலம்*
பஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலம் உள்ளது.எனவே கல்லில் செடி கொடிகள் வளர்கின்றன.
*நெருப்பு*
கல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு. கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறதே சான்று.
*காற்று*
கல்லில் காற்று உண்டு.எனவே தான் கல்லில் தேரை கூட உயிர் வாழ்கிறது.
*ஆகாயம்*
ஆகாயத்தைப் போல் , வெளியிலிருக்கும் சப்தத்தை தனக்கே ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு. எனவே தான் கருங்கல்லில் கட்டப்பட்ட கோவில்களில் நாம் கூறுவதை எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது.
அபிஷேகம் அர்ச்சனை ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது ஒரு கோவிலின் பஞ்சபூதங்களின் தன்மை அதிகரிக்கின்றன.
அக்கோவிலில் நாம் வணங்கும்போது , நம் உடலில் நல்ல (நேர்மறை) அதிர்வுகள் உண்டாகி அதன் மூலம் நம் வாழ்வில் நல்ல பலன்கள் உண்டாகின்றன.
ஓம் நமசிவாய