பாகம்-3

2.1K 97 5
                                    

ஆதித்யா அந்த காலை நேரத்தில் பரபரப்பாக அலுவலகத்திர்க்கு கிலம்பிக் கொண்டு இருந்தான்.இதுவரை சந்தியா அவனுக்கு தேவையான அனைத்தயும் கைமேல் கொடுத்ததால் அவனுக்கு கஷ்டம் தெரியவில்லை.ஆனால் இந்த ஒரு வாரத்தில் ஒவ்வொன்றையும் தேடி எடுப்பத‌ர்க்குள் அவனுக்கு பைத்தியமே பிடித்தது.ஒரு வலியாக கிலம்பி பேருந்து நிலயத்திர்க்கு வந்தான்.பேருந்தில் ஏரி பயணம் செய்ய ஆரம்பித்தான்

பேருந்து ஒரு இடத்தில் நின்ற போது அந்த உணவகம் அவன் கண்களில் தென் பட்டது.சந்தியாவை முதலில் பேருந்து நிலையத்தில் பார்த்த பின் அவளை தினமும் பின் தொடர அரம்பித்தான்.பல நாட்கள் ஆகியும் அவளிடம் பேசும் சந்தர்ப்பம் கிடைக்காததால் அன்று அவளிடம் பேசியே ஆக வேண்டும் என்று அந்த உண‌வகத்திர்க்கு சென்றது நினைவுக்கு வந்தது.என்ன அருமையான நாட்கள் அவை என்று எண்ணி பெரு மூச்சு விட்டான்.

மாலையில் ஆதித்யா கலைப்பாக வீடு திரும்பினான்.

சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு சமையல் அறைக்குள் நுழைந்து காபி போட அரம்பித்தான்.காபி குடித்துக் கொண்டே வந்து தொலைக்காட்சியை ஆன் செய்தான்.ஒரு காதல் பாடல் ஓடிக் கொண்டு இருந்தது.அதை ரசித்தபடியே கால்களை நீடிக் கொண்டு நார்காலியில் அமர்ந்த்தான்.அடுத்த பாடல் பாட ஆரம்பித்த போது சட்டென்று அவன் முகம் மாறியது.

அந்த பாடலைப் பார்பதர்க்காகவே தன் நண்ப‌னுடன் திரையறங்கம் சென்றது நினைவுக்கு வந்தது.

"டேய் சீக்கிரம் டிக்கெட் வாங்கிட்டு வா டா .படம் ஆரம்பிக்க போகுது",என்று தன் நண்பனிடம் கத்திக் கொண்டு இருந்தான் ஆதித்யா."போரேன் இரு டா", என்று சலித்துக் கொண்டு சென்றான் அவன் நண்பன் ராஜேஷ். தன் நண்பனுக்காக காத்துக் கொண்டு இருந்த போது தான் அவளைப் பார்த்தான்.அவள் அவசரமாக வந்து கொண்டு இருந்தாள்.ஆதித்யா மகிழ்ச்சியின் உச்சதிர்க்குச் சென்றான்.

அவள் யாருடனோ கைபேசியில் பேசிக் கொண்டு இருந்தாள்."நான் அங்க தான் நிக்குரேன்.நீ எங்க இருக்க?..... சரி சீக்கிரம் வா.",என்று அவள் பேசி முடித்தாள்.

"ஹாய் சந்தியா படம் பாக்க வந்தீஙளா ?",என்று சிரித்தபடியே கேட்டான் ஆதித்யா."காய் கறி வாங்க வந்திர்ப்பாங்க டா",என்று குறுக்கிட்டான் ராஜேஷ்.அவனைக் கோவமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு தொடர்ந்தான் ஆதித்யா" தனியாவா வந்தீங்க?",என்று வினவினான்." இல்ல அவங்க ஆயா ஓட வந்திர்க்காங்க",என்று மீண்டும் குறுக்கிட்டான் ராஜேஷ்.ஆதித்யா அவன் காதில் ஏதோ சொல்ல அவன் மொளனமாக அங்கு இருந்து சென்றான்.

அவளிடம் ஏதொ கேட்க வாய் எடுத்த போது "ஹாய்" என்ற சத்தம் கேட்டு இருவரும் நிமிர்ந்தார்கள்.ஒரு அழகிய இளைஞன் நின்றுக் கொண்டு இருந்தான்."ஹாய் ரவி",என்றாள் சந்தியா புன்னகையுடன்."இவரு யாரு தெரிஞ்ஜவரா?" என்று குழப்பமாய் கேட்டான் ரவி."தெரியாது டா",என்று அமைதியாக கூரீனாள் சந்தியா."சரி போலாம் வா",என்று கூறி அவள் கையைப் பற்றி உள்ளே அழைத்துச் சென்றான்.

ஆதித்யாவின் முகம் சிவந்து போனது.என்னை தெரியாதா அவளுக்கு.ஏன் அப்படி சொன்னாள்.யார் அவன்.உரிமையாக கையை பிடிக்கிரான்.இவளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.ஒரு வேலை அவளுடைய‌ காதலனாக இருப்பானோ.எப்படி தெரிந்து கொள்வது என்று தனக்குள்ளே பேசிக் கொண்டான்."டேய் படம் ஆறம்பிச்சுரும் வா டா", என்றான் ராஜேஷ் அவசரமாக.எதுவும் சொல்லாமல் அங்கு இருந்து வெளியேரினான் ஆதித்யா.

என் உயிர் காதலியே!Where stories live. Discover now