காவ்யாவை முதலில் எங்கு சந்தித்தாள் என்பதை சந்தியா நினைத்துப் பார்த்தாள்.
"சந்தியா நேரம் ஆச்சு படம் போடிர்வாங்க சீக்கிரம் வா",என்று கத்தினான் ஆதித்யா."இருங்க இன்னும் 10 நிமிஷதில் கிளம்பி விடுவேன்",என்றாள் சந்தியா தலையை சீவிக் கொண்டே.கதவு தட்டும் சத்தம் கேட்டது.ஆதித்யா கதவை திறந்தான்."ஹாய் ஆதித்யா",என்றாள் காவ்யா."ஹே உன் தொல்லை தாங்காம தான் ஆஃபிசுக்கு லீவ் போட்டேன் இங்கேயும் வந்துட்டையா",என்று கேலி செய்தான்.
"போ டா,நான் ஒன்னும் உன்னை பார்க்க வறலை.உன் வொய்ஃபை கூப்பிடு",என்றாள் சிரித்துக் கொண்டே.பேசும் சத்தம் கேட்டு சந்தியா வெளியே வந்தாள்."சந்தியா இது என் தோழி காவ்யா.என் கூட வேலை பாக்குறாங்க,இல்ல இல்ல பார்க்கிர மாதரி தினம் நடிக்கிறாங்க",என்றான் கிண்டலாக.சந்தியா சிரித்துக் கொண்டே "ஹாய் ",என்றாள்."ஹலோ சந்தியா.சாரி உங்க கல்யாணத்துக்கு வர முடியல.அதான் நேரில் பார்த்து கிஃப்ட் குடுத்துட்டு போலாம் என்று
வந்தேன்" ."ஆமா கலெக்டர் அப்போ ரொம்ப பிசி இப்போ தான் நேரம் கிடைத்தது நம்மை வந்து பார்க்க",என்றான் ஆதித்யா.காவ்யா அவனை முறைத்து விட்டு"சரி நான் போகனும் வரேன் சந்தியா அப்புறம் பார்க்கலம்",என்று கூறி கிளம்பினாள்.
மறுநாள் சந்தியா கடைக்கு செல்ல வேண்டும் என்று கூறியதால் ஆதித்யா அவளை தன் அலுவலகம் முன் வர சொல்லி இருந்தான்.அங்கு இருந்து கடைக்கு கூட்டி செல்வதாக கூறி இருந்தான்.
சரியாக 6 மணிக்கு அவன் அலுவலகம் முன் அவள் நின்று கொண்டு இருந்தாள்.6:30 ஆகியும் அவன் வரவில்லை கைபேசி அழைப்பும் கிடைக்கவில்லை.சந்தியாவிர்க்கு பதட்டம் அதிகரித்தது.அவளை தாண்டி செல்லும் அனைவரும் அவளை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.உள்ளே சென்று என்ன ஆயிற்று என்று பார்க்க முடிவு செய்தாள்.உள்ளே இருந்த காவளாலியிடம் விசாரித்து ஆதித்யா அறைக்கு சென்றாள்.ஆனால் அவன் அங்கு இல்லை.
என்ன செய்வது என்று தெரியாமல் வெளியே வர திரும்பியபோது எதிர் அறையின் கண்ணாடி கதவில் அவர்கள் தெறிந்தார்கள்.காவ்யா அழுது கொண்டு இருந்தாள்.ஆதித்யா பக்கத்தில் நின்று ஆறுதல் கூறிக் கொண்டு இருந்தான்.திடிர் என்று அவள் அவன் தோழில் சாய்ந்து அழ தொடங்கினாள்.சந்தியா அதிர்ச்சியில் சிலை போல நின்றாள்.அவளின் கைபேசியை எடுத்து அவன் எண்னை அழைத்தாள்.ஆதித்யா தன் கைபேசியை எடுத்து பார்த்தான்.
"சந்தியா நான் முக்கியமான மீட்டிங்கில் இருக்கேன்.நீ வீட்டுக்கு போ.நாளைக்கு கடைக்கு போகலாம் ",என்று கூறி அவள் பதிலை எதிர்பார்காதவன் போல தொடர்பை துண்டித்தான்.சந்தியா கோவத்தில் கொப்பளித்தாள்.உடனே அங்கு இருந்து வெளியேரினாள்.ஒரு ஆட்டோவில் எறினாள்.அவள் கண்களில் நீர் பெருகியது.அவளால் அதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.தோழியாக இருந்தாலும் கல்யாணம் ஆன ஒருவனை கட்டிப்பிடிப்பது தவறல்லவா.இவரும் அதை தடுக்கவில்லையே.
என்னிடம் சொல்ல முடியாத அளவுக்கு என்ன பிரச்சனை.எப்படி என்னிடம் அவர் பொய் சொல்லலாம்.இத்தனை பேர் வேலை பார்க்கும் அலுவலகத்தில் இப்படி நடந்து கொள்கிறார்களே.
பெண்ணாக இருந்தும் இப்படி நடந்து கொள்கிறாளே.ஒரு வேலை இது அவர்களுக்கு புதிது அல்ல போல.எப்பொழுதும் இப்படி தான் நடந்து கொள்வார்களா என்று எண்ணும் போது சந்தியாவுக்கு அறுவறுப்பாக இருந்தது.வீடு வந்ததை கூட கவனிக்காமல் யோசனையில் மூழ்கி போயிருந்தாள் சந்தியா.
ESTÁS LEYENDO
என் உயிர் காதலியே!
Romanceகாதலித்து திருமணம் செய்து கொள்ளும் இருவர் காதலை இழந்து பிரிகிரார்கள்.அவர்களின் காதல் நினைவுகள் அவர்களை ஒன்று சேர்க்குமா???