பாகம்-10

3.4K 129 20
                                    

ஆதித்யா காலையில் குளித்து விட்டு புது சட்டை போட்டுக் கொண்டு வெளியில் கிளம்பிக் கொண்டு இருந்தான்.அன்று காவ்யாவிர்கு கல்யாணம்.நேரம் ஆகி விட்டதால் தன் பைக்கை திருமண மன்டபத்துக்கு விறட்டி சென்றான்.அவன் உள்ளே நுழைந்த போது மாப்பிள்ளை பெண்ணின் கழுத்தில் தாளி கட்டிக் கொண்டு இருந்தார்.நல்ல வேலை சரியான நேரத்தில் தான் வந்தேன் என்று நிம்மதி அடைந்தான் ஆதித்யா.

சிறிது நேரம் நண்பர்களோடு பேசி விட்டு காலை உணவை உண்ண சென்றான்.

            மண பந்தலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவன் வாங்கி வந்த பரிசை காவ்யாவிடம் கொடுக்க முடியவில்லை.கூட்டம் குறையும் வரை முன் வரிசையில் காத்து இருந்தான்.ஒரு முறை மன்டபத்தை சுற்றிப் பார்த்தான்.அழகான பல பெண்கள் திருமணதுக்கு வந்து இருந்தனர்.அதில் சில பெண்களின் பார்வை இவன் மேல் விழுந்தது.ஆனால் ஆதித்யாவுக்கு எந்த பெண்ணின் இடத்திலும் ஈர்ப்பு ஏர்படவில்லை.விவாகரத்து ஆகி 6 மாதங்கள் ஆகியும் அவனால் சந்தியாவின் நியாபகத்தை அழிக்க முடியவில்லை.

          ஒரு வழியாக மேடைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது."ஹாய் காவ்யா வாழ்த்துக்கள்",என்று கூறி பரிசைக் குடுத்தான்.காவ்யா தன் கனவனிடம் ஆதித்யாவை அறிமுகம் செய்தாள்.அவனோடு கை குளுக்கி விட்டு புகைப்படதுக்கு நின்றான்.

அப்போது நுழைவாசலில் ஒரு பெண் அவசரமாக வந்து கொண்டு இருந்தாள்.நீல நிற பட்டு புடவையில் தன்னை புகுத்திக் கொண்டு இருந்தாள்.தலையில் மல்லிகை பூவ்வும் காதில் ஆடும் பெரிய ஜிமிக்கியும் கைகள் நிறைய கண்ணாடி வலையல்கலையும் காணும் போது அந்த தேவ‌தையே பூலோகதில் இற‌ங்கி வருவதைப் போல் உணர்ந்தான் ஆதித்யா.

        இப்போது அவனுக்கு ஏன் மற்ற பெண்கள் இடத்தில் ஆர்வம் ஏர்படவில்லை என்று புரிந்தது.அவன் சந்தியாவை பிரிந்தாலும் அவளை ஆழமாக காதலித்துக் கொண்டு இருக்கிரான் என்னும் உண்மை தலையில் ஆணி அடித்ததை போல் புரிந்தது.இனி அவனால் அவள் நினைவுகள் இல்லாமல் வாழ முடியாது.அவளைப் பார்த்த அந்த நொடி தாயை பார்த்த சிறு பிள்ளைப் போல் உணர்ந்தான்.

         அவளோடு இனி வாழவே முடியாது என்னும் உண்மை அவன் மார்பில் ஈட்டியை போல் பாய்ந்தது.சந்தியா ஆதித்யாவை கவனிக்கவில்லை.அவனை தாண்டி சென்ற போது "சந்தியா" என்ற சத்தம் கேட்டு திரும்பினாள்.ஆதித்யாவை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தாள்."இந்த புடவையில் ரொம்ப அழகா இருக்க",என்றான் தயக்கமாக.அவள் எதுவும் சொல்லாமல் சென்ற போதும் அவள் இதழின் ஓரத்தில் கசிந்த புன்னகையை அவன் கவனிக்க தவறவில்லை.

       

         ஆதித்யா மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்றான்.ஆகாயத்தில் பறப்பதைப் போல உணர்ந்தான்.ஆதித்யா மீண்டும் காதலில் விழுந்தான்.அவன் காதல் வாழ்க்கையின் இரண்டாவது அத்யாயம் துவங்கியது.

                                                        (முற்றும்)

A very good day to all my readers.Please ignore the spelling mistakes.I am doing my best to correct them.Hope you all liked my story,vote for me because it will give me the confidence to write more stories. Please give me your valuable comments on this story.Please do check out my other works " Netru illadha maatram" ," Ninaivellam neeyadi" and "A strange feeling" .Thank you.

என் உயிர் காதலியே!Où les histoires vivent. Découvrez maintenant