முகவுரை
பிரபஞ்சத்தில் வாழும் அனைத்து மனிதர்களும் ஒர் இலக்குடனே வாழவேண்டும். ஆனால் தற்போது மனிதனோ தான் எதற்காக வாழ்கிறான் என்பதை கூட மறந்துள்ளான். அவனுடைய மனிதத்தன்மையை சோதிக்க எத்தனையோ இன்னல்களும் சவால்களும் அவனை எதிர்கொள்ளும். அத்தகைய நிலையில் மனிதத்துவத்திற்கு சிறிதும் பாதிப்பு ஏற்படாவண்ணம் சிலரே நடந்து கொள்கின்றனர்.இவர்களே மாமனிதராக திகழ்கின்றனர்.அப்படி இல்லாதோர் வாழ்ந்தாலும் மடிந்தது போலத்தான்.
வரலாற்றின் பக்கங்களை புரட்டிப்பார்த்தோமானால். நிறைய சாதனையாளர்களை காண்கிறோம். அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பார்த்தோமானால் ஓர் இலக்குடனே வாழ்ந்திருக்கின்றனர். இவர்கள் சோதனை நேரத்திலும் சோர்ந்து போகாமல் சாதனை படைத்துள்ளனர்.
அவர்களின் இலக்கை நோக்கிய வாழ்க்கை பயணத்தில் எவ்வகையான அபாயகரமான பாதையில் எப்படியெல்லாம் தன்நம்பிக்கையை விட்டுவிடாமல் முயற்சியுடன் சென்றார்களோ அப்பாதையை தேடிக்கண்டுபிடித்து எழுதியுள்ளேன். இது உனது இலக்கினை நோக்கிய பாதைக்கு விளக்காகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் என நம்புகிறேன். எனவே எமது வாழ்வினை ஓர் இலக்கினை அடிப்படையாகக் கொண்டு நம்முடைய வாழ்வினை மாண்பும் மதிப்பும் மிகுந்தஉன்னத வாழ்வாக ஆக்கிக் காள்வோமாக!எம்.ஆர்.எம் மனாஸிர்
(Xylo beat producer)