ஏ பகுத்தறிவு படைத்த மா மனிதனே! உனது எதிர்க்லத்தை கனவாகக் கொள்ளு. அத்தோடு நீ உண்மையையும் அறிந்து கொள்ளு. நீ முதலில் உனக்கு ஒருசில கேள்விகளை கேட்டுக்கொள். நீ எதற்காக வாழ்கிறாய்? வாழ்வில் எதனை சாதிக்கப் போகிறாய்? உன் இலக்கு என்ன? இவற்றிற்கான பதில் உன்னிடம் உள்ளதா எனப் பார். அப்படி இல்லையென்றால் நீ பிறந்ததற்கு அர்த்தமே இல்லை.
நீ முதலில் ஓர் தெளிவான பயன்தரும் பாதையை தெரிவு செய். அதன் பின் அப்பாதையின் முடிவிடமாய் ஒர் பெரிய இலக்கை தெரிவு செய். அப்போது தான் நீ தெளிவானவனாக இருந்து உன் வாழ்க்கை பயணத்தை தொடர முடியும்.
நீ ஒரு இலக்கை தெரிவு செய்தாய் என வைத்துக்கொள். அந்த இலக்கை அடையவேண்டும் என்றால் அதற்கான வாய்ப்பு அவசியம். அந்த வாய்ப்பு ஒரு சிலருக்கு வரும் ஒரு சிலருக்கு வராமலும் போகலாம். முதன் முறை வாய்ப்பு வந்தால் உடனே அவ்வாய்ப்பை பயன்படுத்திவிடு. உன் தன்நம்பிக்கையை கைவிடாதே.
நீ கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் போது திடீரென ஒரு வாய்ப்பு கிடைக்கும் அந்த வாய்ப்பு உனக்கு கிடைத்தது உன் வாழ்விலே இருதி வாய்ப்பாக எண்ணி அதனை எப்படியாவது பயன்படுத்தி எப்படியாவது உன் இலக்கை நோக்கிய பாதையில் வரும் தடைகளை தாண்டி உனக்கே உரித்தான வெற்றி எனும் கிரீடத்தை அணிந்துகொள். இல்லையேன் வந்த வாய்ப்பை தவர விட்டுவிட்டு மறுபடியும் வாய்ப்பு தானாகவே வரும் என எதிர்பார்த்து நிற்காதே அப்படி திரும்பவும் வருவது வாயப்பல்ல அது அதிஷ்டம்.மறுபடியும் அந்த வாய்ப்பு உன்னை வந்து சேரும் வரை காத்திருந்து உன் நேரத்தை வீணாக்காதே. உன் இலக்கை அடைய வேண்டும் என்றால் நீயே அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அப்போது தான் நீயே உனக்காக ஏற்படுத்திக்கொண்ட அந்த வாய்ப்பு உனக்கு எந்த வித தடைகளும் இன்றி உன் இலக்கினை நோக்கிய பாதையை இலகு படுத்தித்தரும். அப்படியே எதிர்பாரா விதமாய் உன் விதிக்கு அமைய நீ செல்லும் பாதையில் தடை ஏற்பட்டால் மனம் தளராமல் உன் பயணத்தை நிறுத்திவிடாமல் இன்னொரு பாதையினால் இலக்கை நோக்கி வெற்றிகரமாக முன்னேறு.