( சம்புவராயர் எனும் அரச மரபினர் பிற்காலச் சோழர்களின் ஆளுகைக்கு உட்பட்டு தொண்டை நாட்டின் பகுதிகளுக்கு சிற்றரசர்களாக வாழ்ந்து வந்தனர். அவ்வாறு ஆட்சி செய்தவர்களில் கி.பி.1356 முதல் கி.பி.1375 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த மூன்றாம் ராஜநாராயண சம்புவராயர் கடைசி சிற்றரசராக அறியப்படுகிறார். அவரது மகன் நான்காம் வல்லாளன் .
அவன் காட்டிற்குள் வேட்டையாடிய பொழுது அவனது முரட்டு குணத்தால் முனிவரின் சாபத்தைப் பெற்றது நினைவிற்கு வந்தது. முனிவரின் சாபப்படி, அவனுக்குப் பிறக்கும் குழந்தையே அவனுக்கு மரணத்தை ஏற்படுத்தும் என அஞ்சினான். அதனால் அஞ்சனக்காரர் ஒருவர் மூலம் அவனுக்குப் பிறக்கவிருக்கும் குழந்தையால் ஏற்படவிருக்கும் ஜோதிட கணிப்புகளை தெரிந்து கொண்டான். அதன்படி, அவனது குழந்தை பூமியை தொட்டு விட்டால் அவன் இறந்து விடுவான் என்பதால் பிறந்தவுடன் குழந்தையையும் அதைத் தொட்டவர்களையும் உடனே கொன்று விட வேண்டுமென அஞ்சனக்காரர் வல்லாளனை அறிவுறுத்தினார்.
அந்தக் காலங்களில் கட்டில்களோ சொகுசான மெத்தைகளோ கிடைப்பது எளிதல்ல. பிரசவத் தீட்டு படாமல் இருக்க கர்ப்பவதிகளை பிரசவ வலி வந்ததும் வீட்டின் மூலையில் தனியாக இருக்கச் சொல்வார்கள். தரையில் விரித்து வைத்த பாயின் மீது பிரசவிக்கும் கட்டுப்பாடு இருந்த காலமது. பிரசவம் பார்க்க அனுபவம் மிகுந்த ஆச்சிகளை கர்ப்பிணிகளுக்கு துணையாக இருக்க வைப்பார்கள். தரையில் விதித்திருக்கும் பாயில் பிரசவம் பார்த்தால், குழந்தை எப்படி பூமியைத் தொடாமல் பிறக்கும்?)
YOU ARE READING
பெண் தெய்வம்
SpiritualRank 2nd action (12/07/2019) Rank 6th Short story (19/07/2019) Rank 2nd women (16/08/2019) இது ஏதோ ஆன்மிக கதை என்று மட்டும் நினைக்க வேண்டாம் ஃபிரண்ட்ஸ்! நம்மைப் போல் பிறந்து வளர்ந்த சதாரண பெண், எப்படி பலரும் வணங்கும் தெய்வமானாள்?!! நிறைய...