25.சீலைக்காரி அம்மன்

710 5 0
                                    

மதுரை மாவட்டம் பேரையூர்அருகில் உள்ள சிலமலைப்பட்டி கிராமத்தில் சீலைக்காரி கோப்பம்மாள் (சேலைக்காரி என்பதைத்தான் மக்கள் பேச்சு வழக்கில் சீலைக்காரி என்கிறார்கள்) என்று ஒரு சாமி இருக்கிறது. அதை சக்கிலியர் ஜாதியைச் சேர்ந்த மக்கள் கும்பிடுகிறார்கள். .ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரிக்கு முந்திய நாள் சாமிகும்பிடும் பங்காளிகள் வேறு வேறு ஊர்களில் இருந்து வந்து சிலமலைப்பட்டியில் கூடுகிறார்கள்.

எல்லோருமாகக் கூடி மண்பானைகள் செய்யும் செட்டியார் வீட்டுக்குப் போகிறார்கள். அவரும் இவர்கள் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். வாசலில் நிறைய மண் பானைகள் பரப்பி வைத்திருக்கிறார்கள். இதில் எது வேண்டுமானாலும் எடுத்திட்டுப் போங்க என்று வந்தவர்களிடம் கூறுகிறார்.

வந்தவர்கள் தேவையான பானைகளை எடுத்துக் கொண்டு போகிறார்கள். அந்தப் பானைகளில் பூ, பழம், நட்சத்திரம் போட்ட சேலை, காதோலை, கருகமணி எல்லாம் வைத்து சிவராத்திரி அன்று சாமி கும்பிடுகிறார்கள். இந்தப் பானைகள் சுடாத பச்சைப் பானைகள், தெலுங்கில் பச்சி குண்ட என்று சொல்கிறார்கள்

இந்தச்சாமியின் கதை என்ன? ஒரு 50 அல்லது 60 வருடங்களுக்கு முன் நடந்த உண்மைக்கதை. சிலமலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பல ஜாதிச் சிறுவர்களும் சிறுமிகளும் தினசரி காலையில் ஆடுமாடுகளைப் பத்திக் கொண்டு காடுகளுக்குப் போவார்கள். பள்ளிக் கூடம் போகிற பழக்கம் அப்போதெல்லாம் ரொம்ப முக்கியம் என்று ஆகவில்லை. சந்தோச மாக ஆடு மேய்க்கப் போகிறார்கள்.

அதில் கோப்பம்மாள் என்கிற தொட்டிய நாயக்கர் ஜாதிப்பெண்ணும் இன்னொரு சக்கிலியர் ஜாதிப்பையனும் (அவன் பெயர் என்னவென்று இப்போது யாருக்கும் தெரியவில்லை) சேர்ந்தே போவார்கள். இருவரும் நல்ல நண்பர்கள். ஆடு மாடுகளைத் தண்ணீருக்கு விடுவது _ காடு பூராவும் பிரிந்து புல் மேய்கிற ஆடுமாடுகளை மாலையில் சேர்த்து ஒன்றாக்கி ஊருக்கு அழைத்து வருவது போன்ற வேலைகளில் அந்தச் சக்கிலியர் பையன் கோப்பம்மாளுக்கு ரொம்ப உதவியாக இருப்பான்.

பெண் தெய்வம்Where stories live. Discover now