வட்டிக்கு வாங்குன காசுல நெல்லு விதைய வாங்கி விதைச்சேனே, விதைச்ச நெல்லு எல்லாம் முளைச்சு நிக்க நாத்து பிரிச்சு நட்டேனே
நட்ட நாத்தெல்லாம் பயிராக விளைஞ்சு நின்னு தண்ணீ கேட்டு தவிக்குதே
ஆத்து தண்ணீயும் வத்திபோச்சு, கம்மா கிணறு குளமெல்லாம் காஞ்சு போச்சு
பூமி தாயோட நெஞ்ச பிளந்து இரத்தமென ஓடும் தண்ணீயையும் உறிஞ்சு கொண்டு போறீகளே
ஆறுபதடியில கிடைச்ச தண்ணீயும் இப்போ ஆயிரம் அடிக்கும் கீழ குறைஞ்சு போய் கிடக்குதே
முளைச்சு நின்ன பயிரெல்லாம் தண்ணீ இல்லாம பிள்ளைய போல வாடி வதங்கயில கண்ணீர் விட்டு பசியாத்தவும் கண்ணுல நீரில்லையே
கடவுளுக்கும் கருணையில்லையே, எங்கள திரும்பி பாக்க ஆளும் வர்க்கத்துக்கும் மனசில்லையேஎங்க பயிரெல்லாம் கருகிப் போய் கெடக்கயில கதறி அழுது கண்ணீர் விடவும் மனசுல தெம்பு இல்லை
வாங்குன கடனெல்லாம் கழுத்த நெறிக்கையில கட்டுன வேட்டி தவிர எல்லாம் வித்தும் வட்டி கட்டவே பத்தலையே
வங்கியிலிருந்து வந்தவன் அவமான படுத்தயில உசுரவிட மானத்தை பெருசா நினைச்சவன் கூனி குறுகி அவமானப்பட்டு நிக்கிறனே
ஊருக்கே சோறு போட்ட விவசாயி பூச்சி மருந்து குடிச்சு வரப்பில் செத்து விழுந்து கிடக்குறனே, எங்க குல காக்க நாதியத்து போனது எங்க விவசாயி இனமடா...
( நம் உண்ணும் ஒவ்வொரு அரிசியிலும் நமது பெயர் இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக விவசாயியின் உழைப்பு உள்ளது, நாம் ஓவ்வொரு முறை உணவு உண்ணும் முன்பும் நமக்கான உணவை படைத்த விவசாயியின் குடும்பம் பசியோடு இருக்க கூடாது என வேண்டி கொள்ளுங்கள்)
YOU ARE READING
என் உள்ளத்தின் உளறல்கள்
Poetryஎன் இதயத்தின் உணர்வுகளுக்கு நான் கொடுத்த உருவங்கள் இவை