என் உயிராலும் என்னவளின் உடலாலும் இம்மண்ணில் உதித்த என் தேவதையே
பூங்கொத்தென உன்னை தூக்கி தருகையில் என் வலிய கரமும் நடுங்கியதே
உன் தளிர் கரங்களால் என் விரல் பிடித்திட புன்னகையிலும் என் கண்கள் பனித்ததேஉன் முதல் அப்பா எனும் அழைபிலே விண்ணையும் தாண்டி என் மனம் பறந்ததே
உன்னிடம் மட்டுமே ஓவ்வொரு முறை தோற்று போகும் போதும் வெற்றி அடைந்தேனே
உன் சின்ன சின்ன குறும்புகளிலும் உன் செல்ல கொஞ்சலிலும் உனக்குள் என்னை தொலைத்தேனே
உன் பத்து வயதிலும் என் துன்பம் கண்டு என் கண்ணீர் துடைத்து உன் மடி சாய்த்து என் அன்னையுமானயே
என் மொத்த உலகமே நீயாகி இருக்கையில் உன்னை தொலைத்து இந்த உலகமே இருளாய் மாறியதேஎன் தேவதையே என் கண்களை போல் பிறருக்கும் நீ குழந்தையாய் தெரிவாய் என நம்பியே தேடி திரிந்தேன்
உன் அப்பா என்ற அழைபிற்க்கு ஏங்கி தவிக்குதடி என் மனம் நாட்கள் இரண்டு கடந்து வந்தாயே என்னிடம்
உன் முகத்தில் தவழ்ந்திடும் புன்னகை எங்கே, உன் செல்ல கோபங்கள் எங்கே, என் கண்ணீர் துடைத்த உன் தளிர் கரங்கள் எங்கே
அன்னையாக எனகிருந்த தேவதையே உடல் முழுதுமாய் துணியால் சுற்றப்பட்டு கிடப்பது ஏனடி
மங்கையாய் பிறந்தது பிழையா இல்லையெனில் இந்த மனித மிருகங்களை தண்டிக்க துப்பில்லா இந்த நாட்டில் பிறந்தது பிழையா
தன்னை பெற்றெடுத்தவலும் பெண் என மறந்தானோ, உன் பால் முகதினை கண்டும் ஒரு நொடியும் குழந்தை என எண்ணவில்லையே அவன் மனம்
உன் சிரித்த முகத்தை எண்ணி கொண்டே கண்ணீரோடு உன்னை சிதையிலிட்டு திரும்புகையில் தூரத்தில் வருகிறான் தன் தேவதையை தூக்கி கொண்டு மற்றொரு தந்தை