அவனும் நானும் 2

393 16 3
                                    

மரங்கள் சூழ்ந்த அந்த சாலையில் அவனோடு அவன் யமஹாவில் பயணிப்பது அவளுக்கு புதிதொன்றும் இல்லைதான். ஆனால் அவனின் மௌனம் புதிதாயிற்றே.....

அந்த மௌனத்தையும் அவளே உடைத்தாள். "என்னை வேலை நேரத்தில் எவ்வளவு சொல்லியும் கேட்காமல், தொல்லை பண்ணி வரவச்சுட்டு பேசாமல் வர இப்போ? அப்படின்னு மட்டும் கேட்காதே. நான் சொல்ல தான் போறேன். ஆனால் இப்படி இல்லை. பசிக்குது ... சாப்பிட்டதும் பேசலாம். உனக்கும் சேர்த்து லன்ச் கொண்டு வந்திருக்கேன். முகத்தை உர்ர்னு வச்சுட்டு வராதே... பார்க்க சகிக்கல..." என்றவளின் பேச்சுக்கு மறுபேச்சு இன்றி சாலையோரம் தெரிந்த பூங்கா அருகே வண்டியை நிறுத்தி வேகமாக உள்ளே சென்றான்.

ஆசியாவிலேயே 25 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் அருகே செயல்பட்டு வருகின்றது.
பூங்காவில் 38 வகையான வண்ணத்துப் பூச்சிகள் ஆரம்ப நிலையில் இடம் பெற்று இருந்தன. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 15கி.மீ. ஸ்ரீரங்கத்திலிருந்து 7கி.மீ. முக்கொம்பிலிருந்து 6 கி.மீ தூரத்திலும், திருச்சி ஸ்ரீரங்கத்தை அடுத்த மேலூர் நடுக்கரை கிராமத்தில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கிடையே 25ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்காவை தமிழ்நாடு அரசு வனத்துறையால் பராமரிக்கப்படுகிறது. எப்போதும் பசுமையாக காட்சியளிக்கும் இந்த வண்ணத்துப்பூச்சிப் பூங்காவுக்கு, சுற்றுலாப் பிரியர்கள், மாணவர்கள், குழந்தைகள் எனப் பலரும் செல்பி மழை பொழிகிறார்கள்.
பூங்காவில் வண்ணத்துப்பூச்சிகள், முட்டையிடுதல், புழு வளருதல், தேன் குடித்தல் என அதன் வாழ்க்கைச் சக்கரத்துக்காக ஒவ்வொரு தாவரத்தையும் தேர்வுசெய்யும். அப்படி வரும் வண்ணத்துப்பூச்சிகள் வருகைக்காக, பூங்காவில் வண்ணத்துப்பூச்சிகளுக்கு மிகவும் பிடித்த சின்யா, பென்டாஸ், டிரைக்டரி, கொரட்டல் ஏரியா, கொன்றை, மேரி கோல்டு பூச்செடிகள், செண்பக மரம் மகிழம் மரம் எனச் சுமார் முந்நூற்றுக்கும் மேற்பட்ட வகை வகையான தாவரங்கள் உள்ளன.
கூடவே புல்வெளிகள், குழந்தைகள் விளையாட தனியிடம், கொஞ்சம் இளைப்பாறிக்கொள்ள மலைவாழ் மக்கள் வசிக்கும் மாதிரி குடில்கள், செயற்கை நீரூற்றுகள், பார்வையாளர்கள் வலம்வர நடைபாதை, வண்ணத்துப்பூச்சிகளின் மூல உருவத்தில் குகை வழிப்பாதைகள். மரங்கள் மற்றும் செடிகளுடன் கூடிய நட்சத்திரவனம். புல்தரைகள், குழந்தைகள் விளையாட்டுத் திடல்கள். அழகிய நடை பாலங்கள், பூங்காவில் உள்ள நட்சத்திரவனம், பல்வேறு நீர்த் தாவரங்கள் அடங்கிய குட்டைகள், பிரமாண்ட வண்ணத்துப்பூச்சி சிலைகள், வண்ணத்துப்பூச்சிகளுக்கு பல்வேறு இடங்களில் உள் அரங்குகள் அனைத்தும் அசத்தல். பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்றுகளில்,உயரத் தண்ணி பீய்ச்சி அடிக்க, அந்தத் தண்ணீர் பார்வையாளர்கள் மீது, பனித்துளியைப் போல் விழுந்து பரவும்.

அங்கிருந்த மரத்தின் அடியில் கற்பலகையில் அமர்ந்தவனுக்கு அருகில் அமர்ந்தவள் தன் கண்களை சுற்றி சுழல் விட்டபடியே
"எவ்வளவு அழகாக இருக்குல. எனக்கு இந்த இடம் ரொம்ப பிடிக்கும். எத்தனை முறை வந்தாலும் இந்த இடம் சலிக்கவே சலிக்காது எனக்கு தெரியுமா? " என்றவாறு அவனை பார்க்க, அவனோ
"தெரியும் தெரியும். அதான் வண்டி இங்கே வந்துச்சு" என்று எங்கோ பார்த்துக் கொண்டே சொன்னான்.

அவள் மனம் அந்த வார்த்தையில் குளிர்ந்தாலும் அதை வெளிக்காட்டமல் அவன் முகம் நோக்கினாள்.

அவனும் அவளை நோக்க ‌கண்ணும் கண்ணும் கலந்து அந்த கெமிக்கல் ரியாக்சனில் தன்னை மறந்து மூழ்கிய அவர்களை, அவர்களுக்கு அருகில் கடந்து சென்ற நபர்களின் சத்தம் நடப்புக்கு கொண்டுவந்தது.

அவ(ரு)னும் நானும் Where stories live. Discover now