15🎊

502 31 7
                                    

"எப்ப வந்தீங்க??" சீலன்  உள்ள நுழைந்தவாறு கேட்டான்.

"காலையில தான்.  என்ன அப்படியே கடையில இறக்கிவிட்ருடா.. போய்கிட்டே பேசலாம். வா. "என்று கைப்பையை  எடுத்தவாறு கூறினாள்..

"அறிவண்ணா விஷயமா.‌"

"அதுல பேச ஒன்னும் இல்ல டா.. "

"எதுக்கு அண்ணி அவங்க கிட்ட காசு வாங்குனீங்க??" சீலன். தன் மனதில் உறுத்திக்கொண்டிருந்த கேள்வியை கேட்டு முடிக்க..

கைப்பையை மேசையின் மேல் வைத்துவிட்டு இருக்கையில் அமர்ந்தாள்.

"வேற என்னபண்ணிருக்கலாம் சொல்லுங்க.. உன்ன மாறி எங்கள முடிவு எடுக்க சொல்றியா அவசரமா!அவங்க அம்மாக்கு நான் அந்த பணத்தை வாங்கலன்னா.. எங்க அறிவு கூட திரும்ப சேர்ந்திடுவேனோன்னு பயம்.. கவலைபடாத அவனுக்கு ஒரு நல்ல லைஃப் அமையட்டும்.. தந்திடுவேன்."கலை.

"நீங்க அத வாங்கினதுதான் அண்ணாக்கு கோபம்..அவரே பேசி சமாளிச்சிருப்பாரு. "

"சீலா.. உங்க வீட்டு நிலைமை இப்படி.. என் வீட்டுல அவளோ பிரச்சனை.. என்ன பண்ணலாம்னு அவங்க கேட்டிருந்தா பேசி முடிவெடுக்கலாம். எடுத்தோனா.. அப்படி ஆகிடும் சோ வேண்டாம்னு சொல்றவங்கட்ட என்ன பேச சொல்ற.. இல்ல எனக்கு காதல் தான் முக்கியம் னு பேச டைம் ஆகாது.. அதுக்கப்புறம் லைஃப் இருக்கு சீலா.. பிடிக்காம அந்த வீட்டுக்குள்ள போயிட்டு தங்கச்சிக்கு மனசாற ஒன்னு வாங்கி கொடுக்கமுடியாம.. இருக்க சொல்றியா?இல்ல.. அவளுக்கு எதுக்கு நான்‌ வாங்கி குடுக்கனும்னு இருக்க சொல்றியா??இல்ல தாய் மாமா பார்த்துப்பாருன்னு விட சொல்றியா?"கலை..

"தமிழ பத்தியும் தாமரைய பத்தியும் நீங்க கவலைபடாதீங்க.. நான் பாத்துக்குறேன். " சீலன்

"அரைச்ச மாவையே ஏன் அரைக்குற?? நீ மணிக்கு கல்யாணத்துக்கு பாப்பியா?? இல்ல என் தங்கச்சிய பாப்பியா??இத பத்தி இனிமே பேசாத.. "

"எல்லாத்துக்கும் கஷ்டம் இருக்கும் அண்ணி.. போராடி தான் நமக்கு தேவையானத வாங்க முடியும்."

இமைWhere stories live. Discover now