சிறையெடுத்தாயோ உனதன்பில்...

421 26 16
                                    

"சீக்கிரம் ரெடியாகு. நேரமாகுது" என்று வெளியே சென்ற தன் அத்தையை மனதில் வசை பாடியவள்.

"மாமா! ப்ளீஸ். எங்க இருக்கீங்க? என்னை இங்க இருந்து கூட்டிட்டு போவேன்னு வாக்கு கொடுத்துருக்கிங்க" என்று தனக்கு மட்டும் கேட்கும் குரலில் வேண்டியவள் கடமையென்று ரெடியானாள் இசைத்தமிழ்.

திடிரென்று போன் அடிக்கவும் யாரென்று பார்த்ததும் வியர்வை துளிகள் அரும்ப வேறு வழியில்லாமல் எடுத்தாள்.

எதுவும் பேசாமல் மௌனமாய் இருக்க எதிர்முனையில் இருந்து மட்டும் குரல் வந்தது.

"ஹேய்! பொண்டாட்டி. ரெடியா இரு. இந்த அஞ்சு வருஷம் தப்பிச்ச மாதிரி இன்னைக்கு தப்பிக்க முடியாது. இனி என்கிட்ட இருந்து நீ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. உன்னை யாரும் காப்பாத்தவும் மாட்டாங்க." என்ற வார்த்தைகளில் உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் நிச்சயம் தப்பிக்க வழி இருக்கும் என்று நம்பினாள்.

அவளின் மனம் ஐந்து வருடங்களுக்கு முன் சென்றது.

ஒரு உறவினர் வீட்டு திருவிழாவிற்கு சென்று திரும்புகையில் நடந்த எதிர்பாரா விபத்தில் பெற்றவர்கள் இருவரும் இறந்துவிட, பின் சீட்டில் உறங்கி கொண்டு வந்தவள் லேசான காயங்களோடு மீண்டிருந்தாள் இசைத்தமிழ்.

மருத்துவமனையில் மூன்று மணி நேரம் கழித்து கண் விழித்தவள் முதலில் கேட்டது "அம்மா அப்பா எங்க?" என்பது தான்.

அவளின் கேள்வியை தாள முடியாமல் அணைத்து கொண்டு தலைக்கோதினார் அவளின் தாய்மாமா கதிரேசன்.

"அம்மாவும் அப்பாவும் வேற ரூம்ல இருக்காங்கடா. வந்துருவாங்க" என்றார் கண்ணீர் நிறைந்த முகத்துடன்.

மற்றவர்கள் இவர்களை கண்டு ஒதுங்கி நின்றாலும் யாருக்கும் கதிரேசன் குடும்பம் இங்கு இருப்பது பிடிக்கவில்லை என்பது தான் உண்மை.

பொறுமையாக தன் தங்கையும் மாப்பிள்ளையும் இறந்துவிட்டார்கள் என்பதை எடுத்து கூற, அதிர்ச்சியில் உறைந்து அழூவதை கூட நிறுத்தி கொண்டது அந்த இளங்குறுத்து.

சிறையெடுத்தாயோ உனதன்பில்... (சிறுகதை)Où les histoires vivent. Découvrez maintenant