நல்ல திடமான மாங்காயை கையில் எடுத்தவள்... வாயை சப்பிக் கொண்டே
அந்த கனியை வயலில் கழுவி அருகில் இருந்த பாறையில் வைத்தவள் அடுத்து உருண்டையான கல்லை எடுத்தவள் அதையும் கழுவி மாங்காயின் நடுமண்டையில் போட அதுவோ உடையாமல் போக்குக் காட்ட கோபப்பட்டவள் இரண்டாம் அடியில் ஓங்கி அடிக்க. அந்த கனி கரடுமுரடாக உடைய இடுப்பில் சொருகி வைத்திருந்த உப்பையும், பச்சை மிளகாயையும் எடுத்தவள் அதை வைத்து நான்குப் போடு போட்டு அதையும் சாந்து போல் அரைத்தவள் என்னை பார்த்து அழகு காட்டியாறே சாப்பிட என் பல் அனைத்தும் கூசி போக பின்னால் திரும்பி கொண்டேன். விட்டாளா அந்த ராட்சஸி என் முன்னால் வந்து நின்று மாங்காயையும் காரத்தையும் தொட்டு தொட்டு சாப்பிட "ஒய் யாரு அங்க.. யாரு டா அது காட்டுக்குள்ள என சத்தம் போட ஒரு நொடி பறித்த மாங்காயை என் கையில் திணித்தவள் பாதி வாயில் போட்டுக்கொண்டே முன்னால் ஓட நானும் அவள் பின்னால் செல்ல அவள் தப்பித்து விட்டால் நான் மாட்டிக் கொள்ள அவரின் கையில் மாங்காயை திணித்து ஒரே ஓட்டமாக ஓடி வந்த ஞாபகம் இன்று வரை அழியாத பொக்கிஷமாய் என் மனதில் இருக்கிறது.. அவள் பெயர் இழையினி.. என் அத்தை மகள்.. நான் அவளோட மகேஷ்.. எங்களோட கதை மாதிரி உங்களுக்கும் நடந்து இருக்க.. நடந்து இருந்தா கண்டிப்பா சொல்லுங்க...