பிருந்தாவனம்

93 9 11
                                    

வணக்கம் நண்பர்களே,
            இது என்னோட முதல் கதை.எப்படி இருக்கும்னு தெரியல.ஏதாவது தவறு இருந்தா கமென்ட் பண்ணுங்க Friends,

                            🌺
       
பிருந்தாவனம்
        
        பெயருக்கு ஏற்றாற்போல் அந்த வீடு அவ்வளவு அழகாக இருக்கும்.வாசலில் இரு புறமும் மரங்கள், விதவிதமான பூச்செடிகள் என இருக்கும். எவ்வளவு பெரிய கவலையில் இருந்தாலும் அந்த இடத்திற்கு வந்தால் மனம் அமைதி ஆகி விடும்.(இப்ப நம்ம வீட்டுக்குள்ள போவோம்)
        
         சந்திரன்,இந்த குடும்பத்தின் தலைவர்.(மனைவி செல்லம்மாள் இறந்து ஒரு வருடம் ஆகிறது)இவருக்கு இரண்டு மகன்கள். இருவருக்கும் திருமணம் முடிந்து பிள்ளைகள் உள்ளனர். அனைவரும் ஒரே வீட்டில் இருக்கின்றனர். இவர்களுக்கு சொந்த டிபார்ட்மென்டல் ஸ்டோர், ஜவுளிக்கடை என பெரிய சாம்ராஜ்யமே உள்ளது. பெரியவர் பாலகுமாரன் மனைவி அம்பிகா.இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.பாலகுமாரன் டிபார்ட்மென்டல் ஸ்டோரையும்,cs Constructionயும் கவனித்துக்கொள்கிறார். சிறியவர் நந்தகுமாரன் மனைவி லலிதா.நந்தகுமாரன் ஜவுளிக்கடையையும்,பிற நிர்வாகங்களையும் கவனித்துக்கொள்கிறார். இவர்களுக்கு ஒரே மகன்.

     சந்திரன் ஹாலில் அமர்ந்து அனைவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். காலை நேரம் என்பதால் வீடு பரபரப்பாக காணப்பட்டது. அம்பிகா, லலிதா இருவரும் சமையல் செய்து கொண்டிருந்தனர். சக்தி வாக்கிங் சென்று விட்டு வந்து ஹாலில் தாத்தாவின் அருகில் அமர்ந்து பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தான்.(நம்ம ஹீரோனு தான நினைக்கிறீங்க. அதான் இல்ல,ஹீரோவோட தம்பி) அப்பொழுது தாத்தா அவனிடம் ,
       'டேய் இங்க ஒருத்தன் உட்கார்ந்து இருக்குறது உனக்குத்தெரியுதாடா'.
    'ஏன் தாத்தா எனக்கு கண்ணு தெரியாதுனு நினைச்சிங்களா,நீங்க உட்கார்ந்து இருக்குறது எனக்கு நல்லாவே தெரியுது. என்ன விசயம்னு சொல்லுங்க'.
    'இன்னிக்கு என்ன நாள்னு தெரியுமாடா'
சக்தி மைன்ட் வாய்சில் ('நமக்கு நம்ம பிறந்தநாளே தெரியாது.இவர் இப்படி ஒரு கேள்வி கேட்டா என்ன பதில் சொல்றது') என்று யோசித்துக் கொண்டிருக்க,
தாத்தா அவனிடம் "என்னடா யோசிக்கிற,பதில் சொல்லு".
சக்தி,உங்க பிறந்த நாளா தாத்தா (அய்யோ முறைக்கிறாரே) அப்பா,அம்மா கல்யாணநாளா,(ஆத்தி இவரு முறைக்கிறத பாத்தா நம்மள போட்டுத்தள்ளிருவாரு போலயே) எனக்கு தெரியல தாத்தா நீங்களே சொல்லிடுங்க.
  
  'டேய் இன்னிக்கு உங்க அண்ணன் பிறந்த நாள்டா'
'ஆமா தாத்தா மறந்துட்டேன்' என்றவன்
    
     'அம்மா,அம்மா' என்று அழைதௌதவாறு சமையறைக்குள் செல்ல அவரோ,'என்னடா எதுக்கு இப்ப இப்படி கத்துற'என்க,  'அண்ணா எங்கமா' என்று கேட்டான்.

அவர் 'அவன் ரூம்ல இருப்பான்டா போய் பாரு,காலங்காத்தால அம்மா அம்மானு ஏலம் விடுற' என திட்ட, அவன் வேகமாக சமையல் அறையிலிருந்து வெளியே வந்தான். அப்பொழுது 'என்னடா காலைலயே என்னைய தேடுற' என்றவாறு தருண் வந்தான். சக்தி ' நா உன்ன தேடுனேனா ஏண்டா காமெடி பண்ற' என்க, நீதானடா அம்மாகிட்ட இப்ப என்ன எங்கனு கேட்ட" .
   நா அண்ணாணு கூப்பிட்டது உன்ன இல்ல சித்து அண்ணாவ புரியுதா.'
'அதான நீயாவது என்ன அண்ணாணு கூப்பிடறதாவது' என கூறிவிட்டு சோபாவில் அமர்ந்து அம்மா குடுத்த டீயை பருக ஆரம்பித்தான்.(உங்க சந்தேகம் புரியுது,ஹீரோ பத்திதான சொல்றேன். )பாலகுமாரனுக்கு 2மகன்கள்னு சொன்னேன்ல அவங்க பேரு சித்தார்த்,தருண்.இளையவர் நந்தகுமாரனுக்கு ஒரே மகன் சக்தி.இவங்க எல்லாரும் இங்க இருக்கும் போது நம்ம ஹீரோ எங்க போனாரு??? பார்ப்போம்.

   சக்தியும்,தருணும் பேசிக்கொண்டிருக்கும் போது அங்கே வந்த லலிதா, 'டேய் யாராவது போய் சித் கண்ணாவ போய் எழுப்புங்கடா' என கூற,தருண் 'அட போங்க சித்தி உங்க அருமை மகன நீங்களே எழுப்புங்க நாங்க போனோம் அவ்வளவுதான், அவன் எங்கள சும்மா விட மாட்டான். நைட் அவன் 1 மணிக்கு தான் வேலை முடிந்து வந்து படுத்தான்'என கூறினான்.லலிதா சித்தை எழுப்ப மாடிக்கு சென்றாள்.

        

   
           🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
    1St அத்தியாயம் சின்னதுதான்.அடுத்து பெரியதாக பதிவிடுகிறேன்.

        story pidicha comment pannunga. story continue panren.Ilana idhoda vitralam.

பிருந்தாவனம்Where stories live. Discover now