அடங்காபிடாரிகளும் ருத்ரனும்
-திக்ஷிதா லட்சுமி💓
"யம்மா, யம்மா "என்று இருபது வயது நிரம்பிய வயசு பெண் மஞ்சுளா கண்களை கசக்கிக் கொண்டு கண்ணீருடன் "ஆத்தா அந்த அடங்காபிடாரி என்னை அடிச்சிட்டா." என்று தன் அன்னையிடன் அழுதுக் கொண்டே கூற. மஞ்சுளாவின் அம்மாவோ,
" அடி செருப்பால, ஒழுங்கா ஓடி போயிடு அந்த துடைப்பக்கட்டைய எடுத்துட்டு வந்தேன் வை. பிச்சிப்புடுவேன் பிச்சி.. இன்னிக்கு அடிச்சிப்பாளுங்க உடனே அரைமணி நேரத்துல சேர்ந்துடுவாளுங்க.. இவளுங்களுக்கு வேற வேலையில்ல.. இதுங்க சண்டையில நம்ம நுழைஞ்சா அம்புட்டு தான். நம்ம மண்டைய பிச்சிக்க வெட்சிடுவாளுங்க.. சரியான ராங்கிக் காரிங்க. மூனு பேரும். "என்று புலம்பிக் கொண்டே அடுப்பில் இருந்து கருவாட்டு குழம்பை இறக்கி வைத்தப்படி தன் மகள் மஞ்சுவை பார்த்து ஏசிக் கொண்டு இருந்தாள் பவுன் என்கின்ற பவுன்அம்பாள்.
இங்கே இப்படி என்றால் அங்கேயோ,
"ஐய்யோ அம்மா, ஐய்யோ, ஐய்யயோ வலிக்குதே.. யாராவது காப்பாத்துங்க. டேய் அண்ணா வாடா வந்து காப்பாத்துடா. "என்று மஞ்சுளா கூறிய அடங்காபிடாரி பெண் மீனாட்சி தன் தாயின் கையால் பிரம்படி வாங்கி கொண்டு இருந்தாள். மீனாட்சியின் தாய் ராணியிடம் இருந்து தன்னை காப்பாற்ற அவளின் அண்ணன் தமிழரசனிடம் கெஞ்சி.. இல்ல இல்ல கதறிக் கொண்டு இருந்தாள் மீனாட்சி.
"தமிழரசனோ, "என் தேவதைக்கு அடி விழுகுதா.. இந்த ராணி கையால் அடி விழுகுதா. "என பாடினான். "அடேய் தமிழே அது இப்படி வரும் டா. என் தேவதைத்கு மாறு வேசமா அந்த ராணிக்கு இங்கே ஏழை வேசமா.. இப்படி வரனும்டா. ஐய்யோ இதுங்க படாதப்பாடு படுறதை விட நம்ம படனும் போலயே.. இப்போவே கண்ணை கட்டுதே நமக்கு.. இதுங்க தொல்லை தாங்கல.. ஆமா அங்க ஏதோ சத்தம் கேட்குது.. அங்க யாரு மொத்து வாங்குறாங்களோ தெரிலயே.. சரி வாங்க அதையும் பார்த்துட்டு வரலாம்.
"ஏன்டி நிறுத்து டி..ஏன் டி உன்னை தான் டி. இப்படி வீட்ல இருக்கிற பொருளை எல்லாம் தூக்கிப் போட்டு உடைச்சிட்டு இருக்க.. நிறுத்துடி. (யப்பா இங்க அடி வாங்கல.. தூக்கிப் போட்டு உடைக்க தான் செய்யுறாங்க. அதுவரை சந்தோஷம். ஆமா யாரு உடைக்கிறா.. இருங்க பார்க்கலாம்.).
"ஏய் கீர்த்தனா நிறுத்து டி. கோவம் இருந்தா யாரு மேல கோவமோ அவங்க மேல காட்டு டி. இப்படி வீட்டு பொருளை தூக்கிப் போட்டு உடைக்காத. "என கீர்த்தனாவின் அன்னை கனகவள்ளி தடுக்க முயற்சி செய்துக் கொண்டு இருந்தாள். ஆனால், அவளால் தன் மகளை தடுக்க முடியவில்லை.. இவளை தடுக்கும் ஓரே ஆயுதம் இவளின் தாய்மாமன் மட்டுமே என்று அறிந்த கனகவள்ளி தன் தம்பி ருத்ரனுக்கு போன் செய்து உடனே வருமாறு கட்டளை விடுத்தாள். அடுத்த ஐந்தே நிமிடத்தில் அந்த ஜமின் மாளிகை முன் நின்றான் ருத்ரன்.
" என்னையே தோற்கடிச்சிட்டாளுங்க. அவளுங்களை நான் சும்மாவிட மாட்டேன். "என கத்திக் கொண்டு மாளிகையில் உள்ள பொருட்களை உடைத்துக் கொண்டு இருந்தவளின் அருகில் வந்த ருத்ரன், "கீத்துமா " என்று அழைத்த அடுத்த நொடி தன் மொத்த கோபத்தையும் விடுவித்துக் கொண்டு தன் மாமன் நெஞ்சில் தஞ்சம் புகுந்து தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டாள்.
இனி அடுத்த அடுத்த அத்தியாயத்தில் ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளுக்கு விடைக் காண்போம்.
################
அத்தியாயம் 2
கண்ணியமும் கார்த்திகேயனும்- சுந்தரி💕"செழிலி💕"
ESTÁS LEYENDO
💗என்னடி மாயாவி நீ 💗
Romanceஇது ஒரு ரிலை கதை... 12 பேர் எழுதிய ஒரே கதை... பன்னிரண்டு பேரின் கற்பனையும் ஒரே கதையில்... கிராமத்து காதலை அழகாக கூறியிருக்கிறோம்...