1

4.7K 41 14
                                    

                                                   3rd August

அவசரமாக ஒரு பெரிய வீட்டினுள்ளே நுழைந்தாள் ஒருவள். வீடு அரண்மனை என்று சொல்ல முடியாவிடினும் இந்த காலத்திற்கேற்ப ஒப்பனைகளுடன் அழகாகவே வடிவமைக்கப் பட்டிருந்த, இந்த ஊரிலேயே மிகப் பெரிய வீடு. எத்தனை தடவை பார்த்தாலும் முதல் தடவை பார்க்கும் ஓர் உணர்வு அவள் மனதில். எப்பொழுதும் போல் அவளின் பர்வதம்மாள் அதாவது அவள் வேலை செய்யும் இவ்வீட்டின் முதலாளியம்மாள், நமக்கு தெரிந்த முதலாளிகளைப் போல் இல்லாமல் அவளை பாசமாக நடத்துபவர்,இன்முகத்தோடு அவளை வரவேற்றவர்,

'என்னடா வெளிய புயல் ஏதும் அடிக்குதா???' என்றார்.

அதெல்லாம் ஒன்னூமில்லையே !!! ஏன்மா??

கேட்டவளிற்கு சிரிப்பே பதிலாக வர அப்போதுதான் அவர் தன்னை சீண்டுவது புரிந்தது. அவளும் அதற்குமேல் பேசாமல் ஒரு சின்ன சிரிப்போடு தன் வேலைகளில் மூழ்கினாள்.

இந்த சிறிய வயதில் அவள் பொறுப்பைக் கண்டு வியந்திருக்கிறார், பர்வதம்.எவ்வளவு கஷ்டமாகினும் அவ்வளவு சீக்கிரம் வெளியே சொல்லமாட்டாள்.மிகவும் பொறுப்பான பெண்...இருந்தும் ஒரு இருபத்தி நான்கு வயது பெண்களிடமுள்ள மகிழ்ச்சியோ ஒப்பனைகளோ எதுவும் அவளிடம் இல்லை. இதோ இப்போது கூட அவரை கவனித்துக் கொள்ள தான் இங்கே வந்திருக்கிறாள். வீட்டு வேலைகள் செய்வதற்கென நிறைய நபர்கள் உள்ளனர்‌ இருப்பினும் அவர் மனதின் வேதனைகளை சொல்வதற்கு அங்கே யாரும் தயாராக இல்லையே...!! அதற்காகவே அவளின் பல வேலைகளுக்கு நடுவே அவர் வற்புறுத்தியதாள் அரைநாள் இங்கே அவருடன் இருப்பாள்.

அவள் இங்கே பர்வதம்மாளின் பிஏ'வாக உள்ளாள். அவர் செயற்கை நாற்கலியாள் இயங்குபவர், அதனால் அவரின் உதவிக்காக நியமிக்கப் பட்டிருந்தாள்.அவர் ஃபேக்டரி, ஆஃபீஸ் என எங்கே சொன்றாலும் அவருடன் செல்வாள்.

அவளின் மனதிலோ என்றுமில்லாமல் இன்று தான் தாமதமாக வந்த காரணத்தை எண்ணிக்கொண்டே தன் வேலையில் மூழ்கினாள் அவள். முந்தைய நாள் இரவு தன் தோழியின் வற்புறுத்தலால் அவளின் பிறந்தநாள் விழாவிற்காக சென்றிருந்தாள். இரவு பதினோரு மணி ஆகிவிட்டதால் அந்த தெருவில் ஒரு பேருந்தும் கிடைக்கவில்லை. சில ரவுடிகள் வேறு அவளை நோக்கி வர ஓட்டமும் நடையுமாக மக்கள் அதிகம் இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டாள். பிறகு வீடு வந்து சேர கிட்டத்தட்ட ஒன்றை நெருங்கிவிட்டது. அவள் எந்த தவறும் செய்யாதபோதே அவளை திட்டித் தீர்க்கும் அவள் சித்தி இந்த சந்தர்ப்பத்தில் அமைதியாகவா இருப்பார்??? யாருடன் ஊரைச் சுற்றிவிட்டு வருகிறாய் என்று கன்னத்தில் அறைந்தார்.

என் நெஞ்சைத் தட்டும் சத்தம்...!Where stories live. Discover now