❤️ அஆ 7❤️

74 5 0
                                    

இருளில் துவண்ட மனம்
உன் வரவால் மீண்டும்
உயிர் கொண்டது...
என்னை யாரென்று தெரியாமல் நீ விழிக்க உன் மௌன மொழியில் நான்
என்னைத் தொலைக்க...
கண்ணால் காதல் செய்யும் கள்வனே நீ என்றும்
என்னவன் தானே...
அன்பே ஆருயிரே...❤❤

பார்வதியின் நினைவுகள் நிஷாவைச் சுற்றி வர நிஷாவின் நினைவுகளோ அவளது நாயகன் கௌதமைச் சுற்றி வந்தது...

'எப்படி நுழைந்தான் என் வாழ்வில்??? அவன் இது வரை என்னோட பேசிய வார்த்தைகள்  சில... நான் அவன் மீது பித்தாகி அலைகிறேனே... இது எனக்கும் அவனுக்குமான ஜென்ம பந்தமா... சிரிக்க மறந்து நெருப்பைக் கக்குகிறானே... என்னோடு அவன் வாழ்வு ஒன்று சேருமா???', பல கேள்வுகள் அவளை அலைக்கழிக்க கண்மூடி கடந்த அமர்ந்தாள்...

அவளது கட்டுப்பாட்டையும் மீறி கௌதமைச் சந்தித்த நாளை நோக்கி மின்னல் வேகத்தில் அவளது எண்ணங்கள் பயணித்தது...

*****************************

2 வருடங்களுக்கு முன்...

மலர் அன்பு இல்லம்...

அன்றைய காலைப் பொழுது எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாய் விடிந்தது...

நிஷா அன்று இல்லத்துக் குழந்தைகளைக் காண சென்றிருந்தாள்... யாருமற்று தனியே இருந்த நிஷாவிற்கு பல சொந்தங்களை உருவாக்கி தந்தது இந்த அன்பு இல்லம் தான்... பெயருக்கேற்றார் போல் அன்பில் விளைந்த இல்லம்...

சிறு சிறு குழந்தைகள்...
அவர்களின் முத்துப் போன்ற சிரிப்பு... பட்டாம்பூச்சியாய் பறந்து திரியும் குழந்தை தனம்...

நிஷா பெருபாலும் தன் நேரத்தை அங்குதான் செலவழிப்பாள்...

குழந்தைகளோடு விளையாடி கொண்டிருந்தவளை ஒரு குரல் கட்டி இழுத்தது...

"அம்மா நான் தான் சொல்றன்ல... எனக்கு இப்ப கல்யாணத்துக்கு என்ன அவசியம்??? நான் இன்னும் சின்ன பையன்தான் தெரியுமா??? இன்னும் எவ்வளோ இருக்கு வாழ்க்கையில சாதிக்க... கொஞ்ச நாள் என்னை இப்படியே விட்றுங்களேன்...", அவன் குரலில் சிறு குழந்தைக்கான சிணுங்கலும் பிடிவாதமும் அதே சமயம் ஆண்மையும் நிறைந்திருந்தது..

அன்பே ஆருயிரே (On hold)Where stories live. Discover now