வெய்யோனின் தாக்கமும்
உன் அருகாமை சூடும்
தேகம் உஷ்ணம் கூடும்
தாகம் கொண்ட நானும்
இதழில் மிஞ்சிய நீரும்
பருக என்னருகில் நீயும்
இதயம் துடித்து மீளும்
விழியில் தேங்கும் நீரும்
காதலில் துடைக்கும் கரமும்
தலைசாய்க்க பொன்மடியும்
நின்கன்னம் உரசலும்
விழியில் இதழ் தீண்டலும்
செவியில் ஹஸ்கி மொழியும்
மகிழ்ச்சி பொங்க ஏந்தலும்
வெட்கம் கொண்டு நெகிழ்தலும்
அன்பை அம்பாய் எய்தலும்
கரமோ என்கேசம் கோதலும்
விழியோ என்விழி நோக்கலும்
மெல்லிய புன்னகைக் கீற்றும்
நாணம் புதிதாய் தோன்றலும்
பெண்மை எட்டிப் பார்த்தலும்
உயிராய் காதல் உரைத்தலும்
மெய்யாய் விரும்பி ஏற்றலும்
கிறக்கி மணவினைநீ கோரலும்
மயங்கி உன்தாரம் ஆதலும்
வரமாய் சேய்யும் நம்மிலும்
இதமாய் ஓங்கிய காதலும்
இமையாய் ஒடுங்கும் கோபமும்
இனிதே வேண்டும் காலமும்
நிறைவேறாக் கனவே நீயும்😉💜💜💜