தொலைதூரக் காதல்💃💜

5 1 3
                                    

கிள்ளை மொழியினிலே 
கொள்ளை  கொண்டவனே 
தொல்லை செய்தேதான்   
உன்பிள்ளை ஆவேனே 
வண்ண முகிலினிலே 
மின்ன வைத்தவனே 
விண்மீன் தொட்டு 
மின்மினி செய்தேனே 
கனவை கலைத்து
நினைவை கொடுத்தவனே 
எட்டும் தூரம் 
கிட்டும் சுகமே 
எட்டா தூரம்
பட்டா போதுமே 
வேசமாய் போகுமோவென 
நேசம் மறைத்தேனே 
பாசமாய்  அணுகினாய்  
வாசமாய்  மாறினேனே  
நறுமணம் தித்திக்க 
நல்மணம் வேண்டினாய் 
இம்மை தவிப்பில் 
மறுமை மறந்தேனே  
வேதமாய் என்மொழி 
கீதமாய் உன்மொழி 
வாழ்தல் புரிந்து 
காதல் பகிர்ந்து 
பாரம் இறங்கிட 
தூரம் மறந்ததே 
சுமையில் விழுந்து 
இமையில் எழுவேன் 
உன்விழியில் பதிந்து 
கருவிழியில் சுழன்றிட 
ஒருஜென்மம் தீராது 
மறுஜென்மம் கோரினேன் 
இணையுமோ இருதயம் 
இணங்குமோ ஊடலும் 
உதிக்கிறேன் உன்னிலே 
தேய்கிறேன் உன்மார்பிலே 
கனவுகள் விழித்திட 
நினைவுகள் ஜெய்த்திட 
தூரம் குறைந்திட 
நேசம் மிகுந்திட 
அணுக்கள் கிளர்ந்திட 
மெய்யும் உணர்ந்திட 
ஈருயிராய் கலந்திடு 
என் இன்னுயிரே !

😍😍😍

நிவி💃யின் கவிகள்💜Tempat cerita menjadi hidup. Temukan sekarang