ஏக்கமும் நானும்💜

5 1 2
                                    

விழியிலே காணும் நிலவும்  நெருங்கி என்இமை தீண்டிடுமோ !

யுகம் தோறும் இன்னிசைக்
குரல் கேட்டு மயங்குவேனோ !

கடலலைகளும் பாதம் உரசி மென்முத்தம் இட்டுச் செல்லுமோ !

என்றும் புன்னகை சிந்தும் துணையும் நகமாய் இருக்குமோ !

வழிகாட்டும் விழியாய் என்னவன் விழிதீண்டி அழைத்துச் செல்லுவானோ !

அன்பில் வீழ்ந்து மீளமுடியாது உறவும் நீண்டு செல்லுமோ !

கதிரவனின் இளம் ஒளியில் பூக்கரம் கோர்த்து நடைபயில்வேனோ !

காதல் நினைவை விண்மீன்
சென்று சேதி சொல்லிடுமோ !

தனிமை போக்கி முகிலும்
என்னை அணைத்துக் கொள்ளுமோ !

விழிநீர் மறைக்க மழையும்
மேனியில் நனைந்து கரையுமோ !

கனவில் மிதக்க மின்னலும்
நினைவாக இருளில் ஒளிக்குமோ !

ஏக்கங்கள் ஏக்கமாய் ஒலிக்க அதனிசையினை இடியும் முழங்கிடுமோ !

🤗🤗🤗

நிவி💃யின் கவிகள்💜Donde viven las historias. Descúbrelo ahora