ஆறாம் நாள்
புதுசா எதுவும் நடக்கவில்லை நான் இங்கு கதை எழுத. யாதிரா எப்பொழுதும் போல் செக்-அப் செய்தாள். அன்றிரவு வெளிவரப்போகும் இண்டர்வியூவை எதிர்பார்த்து வருண் ஓரளவுக்கு சந்தோஷமாய் இருந்தான். மாலை 7.30 கு பிரைம்டைம்(primetime) இல் சன் டிவி இல் இண்டர்வியூ ஒளிபரப்பானது. அன்றிரவு முழுக்க இண்டர்வியூவை பற்றி தான் எல்லா சமூக வலைத்தளங்களும் பேசின. வளர்பிறையாய் நிலவு வளர போனை ஸ்க்ரோல்(scroll) செய்த வருணின் நம்பிக்கையும் வளர்ந்தது.
ஏழாம் நாள்
அன்று எதிர்பாரா விதமாய் கார் விபத்து நிகழ ஒரு குடும்பத்தைக் காப்பாற்றும் இக்கட்டான வேலையில் யாதிரா மூழ்கியிருந்தாள். அக்குடும்பத்தில் ஒருவரையாவது காப்பாற்ற முடியாதா என யாதிராவின் மனம் விம்மியது. ஆயினும் காப்பாற்றப்பட்ட அவ்வொருவர் மட்டும் எவ்வாறு வாழ்க்கையைத் தொடர முடியுமென இன்னொரு மனமும் கேட்டது. பல மணி நேரங்கள் கழித்து தந்தையையும் ஒரு குழந்தையையும் stableஆன நிலைக்கு கொண்டு வந்தாள் யாதிரா. மற்றவர்களைக் கடவுள் பார்த்துக்கொண்டார்.
இவ்வேலை முடிந்து ஒரு நிமிடம் ஓய்வு எடுக்கலாமென நினைக்கும்போது வருணின் முகம் தோன்றியது. கால் வலித்தது. கழுத்தை திருப்பினால் சுர்ரென வலி கை வரை நீண்டது. எல்லாவற்றையும் 10 நிமிடம் பொறுத்துக்கொண்டு வருணின் அறைக்கு பகல் 2 மணிக்கு வந்தாள் யாதிரா.
திரைச்சீலை மூடியிருந்தது. ஒரு துளி சூரியவொளியும் இருளை கெடாமல் இருக்க எல்லாம் மூடியிருந்தது. யாதிராவுக்கு எதுவோ தவறாய் பட்டது.
"மிஸ்டர் வருண்?" மெதுவாய் கூப்பிட்டாள்.
திரும்பி படுத்திருந்த முகம் இப்பொழுது இவளைப் பார்த்தது. கண்கள் சிவந்திருந்தன. முகம் உப்பியிருந்தது.
"என்ன கன்னத்துல ரெண்டு இட்லிய முழுங்காம வச்சிருக்கீங்க?"
வருண் அவளின் மொக்கை ஜோக்குக்கு சிரித்தான்.
"எழுந்திரிச்சு உட்காருங்க வருண்."
YOU ARE READING
யாதிரா (COMPLETED )
General Fiction29 வயதில் Emergency Medicine Associate Consultant ஆக உயர்ந்திருந்தாள் டாக்டர் யாதிரா. எல்லா பேஷண்ட் உம் போல் வருணும் இருப்பான் என அவள் நினைத்தாள் ஆனால் வருண் அப்படி அல்ல. வருணின் வாழ்க்கையை இருமுறைக் காப்பாற்றுகிறாள் யாதிரா - ஒரு முறை எமர்ஜென்சி வ...