அடுத்த நாள் அம்மாவை தியேட்டருக்கு கூட்டிசென்றான். தன் மகனை தமிழ் படத்திலாவது அடையாளம் கண்டுக்கொள்வாள் என எதிர்பார்த்தால் அது நடக்கவில்லை. இருப்பினும் ஹீரோ நல்லா நடிச்சிருக்கான்ல என திரையில் ஒரு அநநிய ஆடவனை பாராட்டினாலும் இது வருணுக்கு போதுமானதாய் இருந்தது. ரசிகர்கள் எண்ட் கிரடிட்(end credits) இல் கைத் தட்டியது வருணின் மனதில் இடியாய் ஒலித்தது. ஆனால் இவ்வின்பத்தை பகிர்ந்துக்கொள்ள யாதிரா இல்லை. அன்று முழுக்க சோசியல் மீடியாவிலிருந்து ரிவியூஸ் எல்லாம் படத்தைப் பாராட்டின, அவனின் நடிப்பை மெச்சின, குறையாமல் போற்றின. இருப்பினும் வருண் டென்ஷனாகவே இருந்தான் யாதிராவை நினைத்து.
அடுத்த நாள் வாட்ஸ் அப் இல் மெசேஜ் வந்தது. ஒரு மருத்துவமனையின் அட்ரஸும் வார்ட் நம்பரும் இருந்தது. யாதிராவுக்கு பாதிப்பா இல்லை அவளின் பெற்றோருக்கு நோயா? வருணுக்கு தெரியவில்லை.
உடனே கார் எடுத்து அந்த ஹாஸ்பிட்டலுக்கு வர இரண்டு மணி நேரமானது. யாதிராவுக்கு தான் எதுவோ நடந்திருக்கிறதென உள்மனம் சொல்ல வருணின் நெஞ்சம் படபடத்தது. அவளைக் காணும் சக்தி இருக்கிறதா என வருணுக்கு தெரியவில்லை.
ரூம் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தபோது அங்கு படுக்கையில் சுருண்டிருக்கும் ஒரு உருவம் தென்பட்டது. பெயர் சொல்லி கூப்பிட எத்தனித்தான் ஆனால் குரல் வரவில்லை.
"டாக்டர் யாதிரா?"
"டாக்டர் இல்ல பேஷண்ட்," யாதிரா புன்னகைத்தாள். இத்தனை மாதங்கள் மாஸ்க் பின்னால் பார்த்த முகத்தை இன்று தான் முதன் முறையாக முழுமையாகப் பார்த்தான் வருண். உடல் நலம் தொய்வால் அவளின் முகம் வாடியிருந்தது. பழையக் கலையை நோய் பறித்துக்கொண்டது. இருப்பினும் அவளின் புன்னகையும் கண்களில் உயிரும் குறையவில்லை.
"என்ன ஆச்சு?"
"Breast cancer. முன்னாடியே தெரியும் 66% சான்ஸ் இருக்குன்னு. 6 monthly ஸ்கேன் எடுத்தேன் சின்னதா கட்டி மாதிரி மார்பகத்துல இருந்தது. திரும்ப வராம இருக்கனும்னா பெஸ்ட் ஆப்ஷன்(option) ரெண்டு மார்பகத்தை ரிமூவ் பண்றது. முந்தா நாள் சர்ஜரி, நீ போன் பண்ணியே அன்னைக்கு. உன் போனை எதிர்பார்க்கல. அப்புறம் நாளைக்கு சர்ஜரி பண்ணலாம்னு தள்ளி வச்சிற்கேன்."
"நாளைக்கு சர்ஜரி ஆ?"
"ம்ம்ம்."
"இப்போவே பாதி எனர்ஜி போச்சு" யாதிரா பெருமூச்சு விட்டாள்.
"அதான் நான் வந்துட்டன்ல," வருண் அவளின் கரத்தை தன் இரு கைகளில் எடுத்து பொத்தினான்.
"Thanks, my friend " யாதிரா அவனைக் கட்டியணைத்தாள். வருண் அவளின் உச்சித் தலையில் முத்தமிட்டான்.
முற்றும்
ESTÁS LEYENDO
யாதிரா (COMPLETED )
Ficción General29 வயதில் Emergency Medicine Associate Consultant ஆக உயர்ந்திருந்தாள் டாக்டர் யாதிரா. எல்லா பேஷண்ட் உம் போல் வருணும் இருப்பான் என அவள் நினைத்தாள் ஆனால் வருண் அப்படி அல்ல. வருணின் வாழ்க்கையை இருமுறைக் காப்பாற்றுகிறாள் யாதிரா - ஒரு முறை எமர்ஜென்சி வ...