யாதிரா - 12

854 57 3
                                    

வீட்டின் இருள் கண்களைத் தாண்டி என் மனதில் ஊடுருவியது. பல நாள் எதிர்பார்பை வளர்த்து பின் ஏமாந்து நொந்து வாழ்க்கையின் விளிம்பில் நிற்கிறேன். எல்லோரும் அறிவுரைத்தது போல் கடினமாக உழைத்தேன், எல்லோரிடமும் சிரித்து பேசினேன், என் உடலின் குறைப்பாட்டைத் தாண்டி எவராவது எனக்கு வாய்ப்பு அளிக்கமாட்டாரா என ஏங்கினேன். எல்லாம் கைக்கூடாத நிலையில் இம்முடிவுக்கு வருவதைப் பற்றி எவருக்கும் குறை சொல்ல அருகதி இல்லை. தவறான முடிவு என்று வஞ்சிப்பவர்கள் இம்முடிவை எடுக்கும் முன் எனக்கு உதவி இருக்கவேண்டும். சக மனிதனுக்கு இரக்கம் காட்டும் குறைந்தபட்ச மரியாதை மட்டுமே நான் எதிர்பார்த்தேன்.

"அன்னைக்கு நான் கேட்டப்போவே சரின்னு சொல்லியிருக்கனும்.இப்போ உயிருக்கு பயந்து கெஞ்சுரியா?" ஏப்ரனில்(apron) இருந்த கத்தியை வருண் எடுத்து கடத்தியவனின் நாக்கின் அருகே கொண்டு செல்ல

கட்!

"அடுத்து வாயுல ரத்தம் வர்ர மேக் அப் போடுங்க. சீக்கிரம்!" இயக்குனர் மிரட்டினார். 

ஹிந்தியிலும் தமிழிலும் எடுக்கப்படும் கிரைம் படத்தில் வருண் நடித்துக்கொண்டிருந்தான். கண் தெரியாத ஒருவன் செய்யும் கொலைப் பற்றிய படம். இந்த மோனோலாக்(monologue) வருண் எழுதி இயக்குனரிடம் சேர்க்குமாறு கேட்டிருந்தான். சமுதாயத்தால் கைவிடப்பட்டவனின் ஆதங்கத்தை அவனால் உணர முடிந்தது, அதைப் படத்தில் காட்டுவது முக்கியம் எனவும் தோன்றியது. மோனோலாக்(monologue) முடிந்ததும் இயக்குனர் பாராட்டினார். பல நாள் காத்திருந்த ஸ்கிரிப்ட் படமாக்கப்பட,  முன் இருந்த நிச்சயமற்ற நிலையிலிருந்து நிலையான வெற்றிக்கு மாறப் போகிறோமென நம்பிக்கை பிறந்தது வருணுக்கு. இப்பொழுது யாதிராவுக்கு போன் செய்வதில்லை வருண். எமர்ஜென்சி சர்ஜரியில் இருக்கிறாள் என பதில் வந்தால் முன்பு காத்திருந்து அடிப்பான் ஆனால் இப்பொழுது போனை வைத்துவிட்டு அடுத்த வேலையைக் கவனித்தான். அவள் சொன்னது உண்மைதான், குணமாகிய பின் டாக்டரை எதற்கு பார்க்க வேண்டும்? இருப்பினும் இதயத்தின் ஓரத்தில் "எப்படி இருக்கீங்க" எனும் கேள்வி ஒலித்தது. "நல்லா இருக்கேன் டாக்டர் யாதிரா," மனதுக்குள்ளேயே பதில் சொன்னான் வருண்.

யாதிரா (COMPLETED )Where stories live. Discover now