#காதல்
காலம் உணர்த்தும் நீ யார் என்று
உன்னை உணர வைக்கும் இந்த உலகிற்கே.
நாட்கள் பல சென்றாலும் அது வாழ்விற்கு நன்பயக்கும்
மனிதம் பிறப்பதற்கு ஒரு மாசற்ற மருந்தாகும்.
உள் கண்விழிச் செய்கையும், காலச் சிறகையும்,
இனம் புரியா இன்பம் உன் மனதை பிடிகொள்ளும்.
நெஞ்சம் கொள்ளும் சோர்வையும், மதி செல்லும் போக்கையும்,
இந்தக் காதல் வென்றுவிடும் நொடிப்பொழுதினிலே.
மேகங்கள் படைசூழ, மழைச்சாரல் மண் நனைக்க ☔
உன் மனம் இதுவென்று இயற்கையோடு ஒன்றினைவாய்.
உயிர்கொண்ட உள்ளத்திற்கு உற்ற நண்பனாய்,
உன்னை ஆட்கொள்ளும் ஒரு புதுவித உணர்வாய்.
இடைப்பட்ட நாட்களிலே நட்பினை நன்கறிவாய்.
காலத்தால் உருவாகின்ற காமத்தினையும் கருவருப்பாய்.
மாதங்கள் மணித்துளியாகி வருடங்களும் உன்னை வரவேற்கும்.
உண்மையாக காதலித்துப்பார் இந்த உலகம் உனக்காகும் !!!
#காதல்_சுயநலமில்லாமல்_எழுதப்படுகின்ற_சுயசரிதை
அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்.
என்றும் என் படைப்பினில் உங்கள்
✍ தர்மா . . .