பிறிதொரு திசையில் பிறிதொரு சுமையோடு இந்த வாழ்க்கை பயணத்தை மேற்கொண்டிருக்கும் சகயாத்திரிகளே, என் திண்ணைக்கு உங்களை வரவேற்கிறேன்.
நீங்கள் உங்கள் சுமைமூட்டைகளை இறக்கி வைத்துவிட்டு என் கதைகளை கேட்டு இளைப்பாருங்கள். அது வரை உங்கள் சுமை மூட்டைகளை இதோ இந்த இரவு நிலவு காவல் காத்துக்கொள்ளும். நான் விளக்கின் திரியை தூண்டி விட்டு வருகிறேன். நீங்கள் வாடைக்கு இதமாக கம்பளியை போர்த்திக்கொள்ளுங்கள். பல கோடி ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருந்து கண்சிமிட்டும் நட்சத்திரங்களும், இந்த இரவை காவல் காக்கும் பால்நிலவும் உங்களை போலவே என் கதைகளை கேட்க ஆர்வமாக இருக்கின்றன.
இந்த கதையின் கதாபாத்திரங்கள் உங்களுக்கு நெருக்கமான யாரையாவது ஞாபகப்படுத்தலாம். அல்லது உங்களேயே கூட உங்களுக்கு அடையாளம் காட்டலாம்.
என்னை கேட்டால் புதிய கதைகள் என்று ஒன்றும் இல்லை என்பேன். யாரோ சொன்ன கதைகளைத்தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அல்லது நாம் வாழும் வாழ்க்கையை யாரோ எங்கேயோ கதையாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
கதை எழுதுவது என்பது கொஞ்சம் விசித்திரமான அனுபவம்தான். சிலநேரங்களில் நாம் கதையின் கையை பிடித்து அழைத்து செல்கிறோம். சில நேரங்களில் கதை நம் கையை பிடித்து இழுத்து சென்றுவிடுகிறது.
என் கதை உங்களை இளைப்பாற்றினால் நான் திருப்தி அடைவேன். என் கதையின் வரிகள் உங்களை புன்னகைக்க வைத்தால் நான் பெருமை பட்டு கொள்வேன். என் கதாபாத்திரங்களோடு சேர்ந்து நீங்கள் ஒரு துளி கண்ணீர் சிந்தினால் நான் பாக்கியசாலி ஆவேன்.
- انضمOctober 26, 2022
قم بالتسجيل كي تنضم إلى أكبر مجتمع لرواية القصص
أو

அன்புள்ள வாசகர்களே, பற்சக்கரம் நாவல் முடிவடைவதற்கு இன்னும் சில அத்தியாயங்களே இருக்கும் நிலைமையில், இணையத்தில் பற்சக்கரத்தை பற்றி விளம்பரம் செய்ய தொடங்கியுள்ளேன். புதினம் என்ற பெயரில் இன்ஸ்ட்டாகிராமில...عرض جميع المحادثات
قصص بقلم Puthinam
- 2 قصص منشورة

பற்சக்கரம் (Tamil - Cogwheel)
12.3K
95
133
சில கதைகள் ஒற்றை வழி பாதையாக ஒரு அழகிய அழுத்தமான கதையை காட்டி செல்லும். சில கதைகள் சிறுநகர சாலையாகவோ, பெருநகர...