ஆதி நிலா இருவரும் அணைப்பில் இருக்க ஆதியின் மொபைல் சத்தத்தில் இருவரும் நினைவிற்கு வந்தனர்.
ஆதி " நீ எங்கயும் போக வேணாம் சரியா " என்று கேட்க நிலா அவனை கேள்வியாக பார்க்க அவனோ அவள் பார்வையை கண்டுகொள்ளாதவன் அவளிடம் பேசினான்.
நிலா " இல்லங்க என்னால உங்களுக்கு எதுக்கு பிரச்சனை " என்று கேட்க அவனோ " அதெல்லாம் ஏதும் இல்ல பேசாம ரெஸ்ட் எடு நா இதோ வரேன் " என்றவன் அவள் பதிளை எதிர் பார்க்காமல் வெளியே சென்றான்.
நிலா அவன் போன திசையையே பார்த்தவள் அப்பொழுது தான் அவளை கவனித்தாள். அவள் அவன் உடையை தான் அணிந்திருந்தாள். அவள் இதயம் ஒரு நிமிடம் நின்று துடிக்க அவன் தான் உடை மாற்றி விட்டான் என்று நினைத்து குழப்பி கொண்டிருந்தாள்.
ஆதிக்கு அவன் வீட்டினர் போன் பண்ணிருக்க அவன் அவர்களை சமாளித்து விட்டு திரும்ப அவள் இருக்கும் அறைக்கு வந்தான். ஆதி அவளை பார்க்க அவள் ஏதோ யோசித்து கொண்டிருந்தாள்.
ஆதி " ஹே என்ன யோசிச்சிட்டு இருக்க " என்று கேட்க அவளோ இன்னும் அதே நிலையில் இருந்தாள். ஆதி மனதில் " என்னாச்சி இவளுக்கு " என்று நினைத்தவன் அருகில் சென்று அவள் தோளில் கை வைக்க அவள் பயந்து எழுந்தாள்.
நிலா " ஹா " கத்தி கொண்டே எழ அவள் கத்தியதில் அதிர்ச்சியானவன் அவள் மேலே விழ இருவரும் கட்டிலில் விழுந்தனர். கீழே விழுந்ததில் அவள் சட்டை விலகி இருக்க ஆதியின் கரம் நிலாவின் வெற்றிடையில் பதிய அவள் விழிகள் அதிர்ந்து விரிந்தது.
ஆதி அவள் விழிகளில் தன்னை மறந்து தொலைந்திருந்தவன் அவர்கள் இருந்த நிலையை கவனிக்க வில்லை. நிலா இன்னும் அதிர்ச்சியுடன் அவனை பார்க்க அவள் பார்வையில் தெளிந்தவன் அவளை விட்டு எழுந்தான்.
ஆதி அவன் தலையை அழுந்த கோதி கொள்ள அவன் அவளை பார்த்தான். அவள் இன்னும் அதிர்ச்சியில் இருக்க அவளை பார்த்தவன் இதழ் மெல்ல விரிந்தது.
ஆதி " ஓய் " அவன் அழைக்க அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். ஆதி "என்னாச்சி டி என் இப்டி முழிக்கிற " என்று கேட்க அவளோ "இல்ல நா நீங்க " என்று அவள் உளற அவளை மனதில் ரசித்தவன் அவள் நெற்றியில் இதழ் பத்திதான்..
YOU ARE READING
என் விடியல் நீயே 💖...
General Fictionஇருளாய் இருந்த வாழ்வில் ஒளியாய் வரும் ஒரு காதல் கதை....