ஆதி அவளுக்காக தானே சமைத்து கொண்டிருக்க இங்கு நிலவோ அவன் நினைவில் முழுதாய் தன்னையே தொலைத்திருந்தாள்.
நிலாவுக்கு ஆதியை பிடித்திருக்கிறதா என்றெல்லாம் தெரியாது ஆனால் ஏனோ அவனுடன் இருப்பதை பாதுகாப்பாக உணர்ந்தாள்.
அப்படியே இரண்டு மணி நேரம் கடக்க ஆதி அவளுக்கு தேவையான உணவை செய்தவன் அவளை அழைக்க வந்தான். நிலா யோசித்துக் கொண்டே இருந்ததில் உட்கார்ந்தபடியே உறங்கி இருக்க அதை பார்த்த அவள் என் இதழில் ஒரு சிறிய புன்னகை.
சற்று நேரம் அவளை ரசித்து பார்த்தவள் பின்பு நேரம் ஆவதை உணர்ந்த அவளை எழுப்ப வந்தான். ஆதி நிலா அருகில் அமர்ந்தவன் " நிலா குட்டி எழுத்துரிடி " என்று அவன் எழுப்ப அவளோ திரும்பி அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். அவன் அவள் முகம் பார்க்க அவளோ ஒரு சிறிய புன்னகையுடன் நிர்மலமாக உறங்கிக்கொண்டிருந்தாள்.
கொஞ்ச நேரம் அவள் உறங்கட்டும் என்று அமைதியாக இருந்தவன் அவளை ரசித்து கொண்டு ஒரு கையால் அவள் தலை முடியை கோதி கொண்டிருந்தான்.
ஆதி ஒரு வாரம் முன்பு இப்படி ஒரு பெண்ணை பார்த்ததும் காதல் கொண்டு அவளுக்காக எதையும் செய்வான் என்று யாரும் சொல்லிருந்தால் அவன் அவர்களை கண்டிப்பாக பைத்தியம் என்று தான் சொல்லிருப்பான்.
ஆனால் இன்றோ எது வந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்று நினைத்து கொண்டு அவளை நெஞ்சில் தாங்கி கொண்டிருக்கிறான்.
ஆதி எல்லாத்தையும் நினைத்து பார்த்தவர் அவளை சந்தித்ததையும் நினைத்து பார்த்தான். கொட்டும் மழையும் அவளை பாதிக்க வில்லை அந்த அளவுக்கு அவளை வருத்தி இருக்கிறார்கள் என்று நினைத்தவன் அவர்கள் மேல் அவ்வளவு கோவம்.
ஆதிக்கு அவர்களை சும்மா விடுவதில் சற்றும் விருப்பமில்லை. அதும் தன்னவளை அப்படி பார்த்ததால் அவர்களை எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தவன் ஏதோ நினைத்து கொண்டு யாருக்கோ போன் செய்து பேசினான்.
YOU ARE READING
என் விடியல் நீயே 💖...
General Fictionஇருளாய் இருந்த வாழ்வில் ஒளியாய் வரும் ஒரு காதல் கதை....