ஆதி அடிக்கும் மொபைலை பார்த்துக்கொண்டிருக்க நிலா அவனை கேள்வியாக பார்த்தாள். ஆதிக்கு தெரியும் இது அத்தனையும் நிவியின் வேலை என்று இருந்தும் இது நல்லதுக்கு என்று நினைத்தவன் நிலாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் போனை ஆன் செய்து காதில் வைத்தான்.
ஆதி "ஹலோ அம்மா" என்று அவன் அழைக்க நிலா அவன் அம்மா அழைத்ததால் அவன் என்ன பேசுகிறான் என்று கேட்பதற்காக அமைதியாக அமர்ந்திருந்தாள்.
ஆதியின் தாயோ "ஆதி எப்படிப்பா இருக்க" என்று கேட்க ஆதி தன் அன்னை எதுவும் தெரியாதது போல் பேசுவதை உணர்ந்தவன் அவனும் அது போலவே பேசினான்.
ஆதி " நான் நல்லா இருக்கேன் மா நீங்க நல்லா இருக்கீங்களா எப்ப ஊருக்கு வரதா இருக்கீங்க" என்று கேட்க அவரும் " இன்னும் ரெண்டு நாள்ல நானும் அப்பா வந்துருவேன் டா உன் தம்பி ஏதோ வேலை இருக்கா அதனால நாளைக்கு வரேன்னு சொன்னான்" என்று சொல்ல அவனும் சகஜமாக அவருடன் பேசிக் கொண்டிருந்தான்.
ஆதியின் அன்னை " தம்பி நீ வேற ஏதோ போன் பண்ணி சொன்னாள் யாருப்பா அந்த பொண்ணு அவ சொல்றது " என்று கேட்க ஆதியோ கொஞ்சமும் அசராமல் " நிவி உங்ககிட்ட என்ன சொன்னானு எனக்குத் தெரியாது மா ஆனால் நான் நிலாவை காதலிக்கிறது உண்மை அவ இப்ப நம்ம வீட்லதான் இருக்கா" என்று சொல்ல ஆதியின் அன்னைக்கு அவன் பதிலில் வருத்தம் தோன்றினாலும் அவர் பேச நினைத்ததை பேசினார்.
" என்ன ஆதி சொல்ற திடீர்னு நீ அந்த பொண்ண விரும்புறேன்னு சொன்னா அப்போ நிவிக்கு என்னப்பா பதில் சொல்லுறது அவ உன்னையே தானே நெனச்சிட்டு இருக்கா" என்று கேட்க அவன் தனியாக பேச நினைத்தவன் நிலாவை பார்க்க அவன் ஏற்கனவே தன் அன்னையிடம் காதலை சொன்னதைப் பற்றி அதிர்ச்சியில் இருந்தவள் அதற்குப்பின் அவன் பேசுவது எதையும் கவனிக்கவில்லை.
அவள் நிலையை பார்த்தவனுக்கு சிரிப்பு வர மனதில் புன்னகைத்துக் கொண்டவன் போனை எடுத்துக் கொண்டு தனியே சென்றான். அவன் சிரித்ததில் உணர்வுக்கு வந்த நிலா அவன் தாயிடம் அவன் ஏதோ தனியாக பேச நினைப்பதை உணர்ந்து தன்னவனுக்காக காத்திருக்கத் தொடங்கினாள்.
YOU ARE READING
என் விடியல் நீயே 💖...
General Fictionஇருளாய் இருந்த வாழ்வில் ஒளியாய் வரும் ஒரு காதல் கதை....