ஆதித்ரேயன் அன்று இரவு முழுவதும் யாரென்று தெரியாத அவளை தாயாய் தன் நெஞ்சில் தாங்கிக்கொள்ள அவளும் நீண்ட நாள் கழித்து உறங்குபவள் போல அவன் நெஞ்சை மஞ்சம் ஆக்கி உறங்கிக் கொண்டிருந்தாள்.
அவள் காய்ச்சல் முழுவதும் குறைந்துவிட அத்துடன் அன்றைய இரவே மழையும் குறைந்து விட்டது. அடுத்த நாள் யாருக்கும் காத்திராமல் விடிந்தது.
மரங்கள் மழை துளிகளால் நிறைந்திருக்க பறவைகள் தத்தம் கூட்டிலிருந்து அதன் சத்தத்துடன் வெளி வர இளஞ் சூரியனும் மெல்ல வெளிவரத் தொடங்கினான்.
சூரியனின் வெளிச்சம் அந்த அறையின் ஜன்னல் வழியே உள்ளே வர அந்த வெளிச்சம் ஆதியின் முகத்தில் பட அவன் அந்த வெப்பத்தில் மெல்ல கண் விழித்தான். அரைத்தூக்கத்தில் எழ முயல அப்பொழுதுதான் உடம்பில் ஏதோ பாரம் அழுத்துவது போல் உணர்ந்தான்.
மெல்ல கண்களை நன்றாக விழித்துப் பார்க்க அப்போதுதான் அவளை கண்டான். அவள் முகத்தை அத்தனை அருகே கண்டவன் ஒரு நிமிடம் சொக்கித்தான் போனான்.
இது எதுவும் அறியாத அவளோ அவனை கழுத்தோடு கட்டிக் கொண்டு உறங்க அவளைப் பார்த்தவன் முகத்தில் ஒரு சின்ன புன்னகை மலர்ந்தது.
ஆதி மெல்ல அவளை தன் அணைப்பிலிருந்து விலக்கி கட்டிலில் படுக்க வைத்து எழுந்தான். அவள் நெற்றியில் கை வைத்து பார்த்தான்.
ஆதியின் மனமோ " நல்லவேளை காய்ச்சல் முழுசா குறைஞ்சுட்டு" என்று நினைத்துக்கொண்டு அவளை பார்த்தான். அமைதியான கடல் போல் அவன் உறங்கிக் கொண்டிருக்க சிறிது நேரம் அவளைப் பார்த்தவன் சின்ன சிரிப்புடன் வேறு ஒரு அறைக்கு குளிக்க சென்றான்.
அவள் மழையில் நினைந்ததாலும் காய்ச்சலாலும் அவள் உடம்பு அசதியில் நன்றாக உறங்கிக் கொண்டிருக்க அவளை தொந்தரவு செய்யாமல் ஆதி அங்கேயே தனது அலுவலக வேலையை தொடர்ந்தான்.
சற்று நேரம் அப்படியே கடக்க அந்தப் பெண் மெல்ல கண் விழித்தாள். ஆதி அவளை கவனிக்காமல் வேலையில் மூழ்கி இருக்க அந்தப் பெண்ணோ காய்ச்சலால் எரியும் கண்களை சிரமப்பட்டு பிரித்து எழுந்தாள்.
YOU ARE READING
என் விடியல் நீயே 💖...
General Fictionஇருளாய் இருந்த வாழ்வில் ஒளியாய் வரும் ஒரு காதல் கதை....