மாதா, பிதா, குரு, தெய்வம்
சிறு வயது முதல் நாம் கற்றது.
ஆனால், இவ்வரிசையில் ஏதோ பிழை இருப்பது போல் தெரிகின்றதே!
பெண்களே! உமக்கு கூட அது தெரியவில்லையா?தன் உயிருக்கும் மேலாய்
தன் வீட்டின் தெய்வமாய்
தவறுகளுக்கு குருவை மிஞ்சும் அளவு தண்டனை கொடுப்பதில்
தாயாகவும் தகப்பனாகவும்
பெண்களுக்கு திகழ்வது
தன் கணவன் அல்லவா!ஏன் அவ்வரிசையில் கணவனுக்கு இடமில்லை?
அன்பிற்கினியனாய் என்னை கரம்
பற்றிய அவ்வேளையிலிருந்து
எனக்காக உழைக்கும்
இயந்திரமானவர்!பிள்ளை பிறப்பதற்கு முன்பே
தன் பிள்ளையை எண்ணிச்
சுமைகளை தன் நெஞ்சில் சுமந்து
எதிர்காலத்திற்காக ஓடுகின்றவர்!மனைவிக்கு உண்மையானவனாய்
பெற்றோருக்கு நல் மகனாய்
தன் பிள்ளைக்கு அன்பின் வடிவான தந்தையாயிருப்பதில்
என்னவனைப் போல் எத்தனை பேர் உண்டு?சிடுசிடுவென சிலசமயம் கடிந்தாலும்
தன் சிறகால் அடுத்த நொடி என்னை
அனைக்கும் சுகம் பெற
என்ன தவம் செய்தேனோ!புரியாமல் சினம் கொண்டாலும்
இப்பேதை கொடுக்கும் தொல்லை எல்லாம்
சகித்து உன் மார்பில் துயில் கொள்ளும்
சுகம் பெற என்ன தவம் செய்தேனோ!நல் வயிற்றில் பிறந்து
நல் மனையில் புகுந்து
நல் மனிதரை மணக்க
நான் எப்பிறவியில் என்ன தவம் செய்தேனோ!