மர்மமாய் மனதை கவர்ந்தவளே 1

39 2 1
                                    



இருள் முற்றாய் சூழ்ந்திருக்க சுற்றுப்புறம் முழுதும் அந்த தண்டவாளத்தில் பயணித்துக்கொண்டிருந்த ரயிலின் சத்தம் மட்டுமே எதிரொலித்தபடியிருந்தது. ஆங்காங்கே சில தெருவிளக்குகளின் வெளிச்சம் தென்பட்ட போதிலும் அது இருளின் வீரியத்தை மாற்றிடவில்லை. இரவு எட்டு மணிக்கு தொடங்கிய பயணம் காலையில் தான் முடிவடையும் என்று தெரிந்ததாலோ என்னவோ காற்றை கிழித்துக்கொண்டு தடம் மாறாது தடதடத்துக்கொண்டிருந்தது அந்த A9 ரயில். வெளிப்புறம் இவ்வாறிருக்க ரயிலினுள்ளே மாறாக அனைத்து விளக்குகளும் ஒளிர்ந்தபடியிருந்தபோதிலும் அனைவரும்  ஆழ்ந்த சயனத்தில் இருந்தனர்.

ஆனால் இவற்றுக்கு விதி விலக்காக தூங்காமல் ஜன்னலோரமாக அமர்ந்து இருளை வெறித்தபடி முகத்தில் மோதிய குளிர்காற்றை அனுபவித்தபடியே தீவிர சிந்தனையில் இருந்தான் ரக்ஷன்.

அவன் மனதிலிருந்து குழப்பங்கள் அவன் உறக்கத்தை தூர விரட்டிட எதிர்காலம் பற்றி சிந்தனையில் அவனுக்கு உறக்கம் வரமறுத்ததோடு அவனுக்கு உறங்கவும் விருப்பமில்லை. இத்தனை நாட்களாய் தான் வாழ்ந்த வாழ்க்கையை இனி தன் பெற்றோரின் கையில் ஒப்படைத்து விட்டு வேடிக்கை பார்ப்பதா என்ற கோபம் ஒருபுறமிருக்க மறுபுறமோ தன் எதிர்காலம் பற்றிய கனவுகளை தன் பெற்றோரின் முடிவு சிதைத்துவிடுமோ என்ற பயமும் இருந்தது. ஆனால் இத்தனை காலம் பெற்றோரின் பேச்சை மீறி நடந்து பழக்கமில்லாதவனுக்கு இம்முறை எதிர்க்கவோ எதிர்வாதம் புரியவோ முடியுமென்று தோன்றவில்லை.  நடப்பது நடக்கட்டுமென்று எண்ணியே ஊரிற்கு கிளம்பியவனை என்ன பூகம்பம் காத்திருக்கிறதோ என்ற பயம் தன்னிஷ்டத்திற்கு ஆட்டிப்படைத்தது.
பல சிந்தனையில் உழன்றவனை கலைத்தது அவனது அலைபேசியின் சிணுங்கல்.

யாரென்று பார்த்தவன் அழைப்பை துண்டித்துவிட்டு மொபைலோடு எழுந்து கதவருகே சென்றவன் மொபைலில் டேட்டாவை ஆன் செய்து வாட்சப்பில் அந்த இலக்கத்திற்கு அழைத்தான்.
மறுபுறம் அழைப்பு எடுக்கப்பட்டதும்
“சொல்லு குணா..”

மர்மமாய் மனதை கவர்ந்தவளேWhere stories live. Discover now