காலை எட்டு மணியளவில் ரயில் கடைசி ஸ்டேஷனான மேட்டூரில் நிற்க அதிலிருந்து ரக்ஷனும் தேஸ்விதாவும் இறங்கினர். அவன் அன்று வருவதை பற்றி குணாவை தவிர வேறு எவருக்கும் தெரியாது. அவன் வருவதை ஏற்கனவே தெரிவித்திருந்தால் அவனின் தந்தை அவரின் முடிவை அன்றே செயற்படுத்தியிருப்பாரென்று நன்கு தெரிந்ததாலேயே அவன் வருவதை யாருக்கும் தெரிவிக்கவில்லை. தன் லக்கேஜோடு கீழே இறங்கிய ரக்ஷன் தேஸ்விதாவையும் அழைத்துக்கொண்டு டாக்சியெடுப்பதற்காக வந்தான்.
அவனை கண்டதும் டாக்சி ஓட்டுனரொருவர் முன்னே வந்து
“என்ன தம்பி.. நீங்க இன்னைக்கு வருவதாக பெரியவீட்டுல யாரும் சொல்லலையே??” என்று கேட்டவரின் கண்களோ ரக்ஷனருகே நின்றிருந்த தேஸ்விதாவையே அளவிட்டபடியிருந்தது.ரக்ஷனுக்கு அவரது பார்வையின் அர்த்தம் புரிந்த போதிலும் தேஸ்விதாவிற்கோ அது எரிச்சலை கிளப்பியது.
“அவசரமாக கிளம்பவேண்டியதாக போயிடுச்சு அண்ணே. அதான் வீட்டுல கூட சொல்லலை... நாம கிளம்பலாம்னே.. வீட்டுக்கு போறதுக்கு முதல்ல தம்பிராஜா கடைக்கு போயிட்டு போகலாம்னே..” என்று ரக்ஷன் கூற அதை ஏற்றவர் ரக்ஷனின் லக்கேஜினை வாங்கி டிக்கியில் வைத்து இருவரும் ஏறியதும் காரை கிளம்பினார்.
பதினைந்து நிமிட பயணத்தின் பின் கார் ஒரு புடவைக்கடை முன் நின்றது. அதிலிருந்து இறங்கிய ரக்ஷன் தேஸ்விதாவையும் இறங்கிச்சொன்னான்.
அவள் இறங்கியதும் ட்ரைவரிடம்
“அண்ணே.. கொஞ்ச நேரம் இங்கேயே இருங்க.. நாங்க துணிமணி கொஞ்சம் எடுக்க இருக்கு.. எடுத்துட்டு சீக்கிரம் வந்திடுறோம்...” என்று கூறிவிட்டு தேஸ்விதாவை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான் ரக்ஷன்.உள்ளே வந்ததும் தேஸ்விதா ரக்ஷனிடம்
“ஏன் டாக்சியை வெயிட் பண்ண சொன்னீங்க?? அனுப்பியிருக்க வேண்டியது தானே.. அந்த ஆளு முழியே சரியில்லை..”“நீங்க நினைக்கிற மாதிரி ஆளு இல்லைங்க அவரு.. நான் தான் சொன்னேனே.. எங்க குடும்பம் தான் இந்த ஊருக்குள்ள ரொம்ப செல்வாக்கான குடும்பம். அதோடு நான் எப்போ வந்தாலும் இந்தண்ணா தான் என்னை அழைச்சிட்டு போவாரு.. எப்பவும் தனியாக வர்ற நான் இன்னைக்கு ஒரு பொண்ணு கூட வந்து இறங்கியதை பார்த்ததும் என்ன விஷயம்னு தெரிஞ்சிக்க தான் உங்களை அப்படியொரு லுக்கு விடுறாரு..”
VOUS LISEZ
மர்மமாய் மனதை கவர்ந்தவளே
Mystère / Thrillerரயிலில் சந்திக்கும் ஒரு பெண்ணிற்கு ஏதோ ஆபத்திருப்பதை உணர்ந்து அவள் யாரென்று தெரிந்து கொள்ளாமலே தன் ஊரிற்கு அழைத்து வருகிறான் ரக்ஷன். அவள் யார் அவளுக்கு என்ன ஆபத்து என்று கூறும் கதையே இது..