மர்மமாய் மனதை கவர்ந்தவளே 4

14 1 1
                                    

மாலை வீடு வந்த சங்கரன் ரக்ஷனை தன்னறைக்கு வரச்சொல்லிட ரக்ஷனும் அவரை பின்தொடர்ந்து அறைக்கு சென்றான்.

அறையிலிருந்த அவரது சாய்வு நாற்காலியில் அமர்ந்து சங்கரன் ரக்ஷனிடம்

“சாப்பிட்டியாய்யா??”

“ஆச்சுபா..”

“அந்த பொண்ணு...??”

“சாப்பிட்டு அப்பவே தூங்க போயிட்டாங்கப்பா...”

“யாருய்யா அந்த பொண்ணு..”

“அப்பா.. அவங்க..”

“சொல்லு... எதுனாலும் பார்த்துக்கலாம்..” என்று ரக்ஷனிடம் கேட்க நடந்ததனைத்தையும் தந்தையிடம் கூறினான் ரக்ஷன்.

“எவன்டா அவன் பொட்ட புள்ளனு கூட பார்க்காமல் நடுசாமத்துல துரத்திட்டு வந்தது...?? அவனுங்களை சும்மாவா விட்டுட்டு வந்த??” என்று கோபத்தில் உறும

“அந்த நேரத்துல அவங்கள பத்திரமாக அழைச்சிட்டு வரணுங்கிறது மட்டும் தான் மனசுல இருந்துச்சு... அதான்பா அமைதியாக இருந்துட்டேன்...”

“சரிடா.. அந்த புள்ள தன்ன பத்தி ஏதாவது வெவரம் சொன்னுச்சா??”

“இல்லபா.. இப்போதைக்கு ஏதும் கேட்காதீங்கனு சொல்லிட்டாங்கப்பா... ஆனா அவங்ககிட்ட தப்பு இருக்கதா எனக்கு தோனலைபா.. ஆனா ஏதோவொரு விஷயத்தை நம்மகிட்டயிருந்து மறைக்கிறாங்கனு மட்டும் புரியிது...”

“சரிய்யா.. நானும் ஆளுங்களைவிட்ட அந்த பொண்ணை பற்றி விசாரிக்க சொல்றேன்... நீயும் அந்த புள்ளையை கொஞ்சம் கண்காணிச்சிக்கோ. வீட்டுல யாருக்கும் இதை பற்றி தெரியவேண்டாம்.”

“சரிப்பா...”

“ம்ம்..பொறகு.... உன் நிச்சயம் பத்தி உங்க அம்மா உன்கிட்ட சொல்லியிருப்பானு நினைக்கிறேன்...”

“அப்பா.. அது.. நான்...”

“இங்கப்பாருய்யா.... உனக்கும் ரேவதி புள்ளைக்கும் இந்த ஏற்பாடுல விருப்பமில்லனு ரேவதி புள்ள சொன்னுச்சு.. உங்க இரண்டு பேருகிட்டயும் சம்மதம் கேட்டு தான் இந்த பேச்சையே எடுத்திருக்கனும்.. ஆனா உன் அத்தைக்காரி அடிச்ச கூத்துல அவசரமாக உங்க இரண்டு பேரோட விருப்பத்தையும் கேட்காமலேயே இப்படியொரு முடிவு எடுக்க வேண்டியதாக போச்சு.. நீ கவலைப்படாத... எல்லாத்தையும் அப்பா பார்த்துக்கிறேன்.. நீ நிச்சயத்துக்கு தயாராகு...”

மர்மமாய் மனதை கவர்ந்தவளேDonde viven las historias. Descúbrelo ahora