காலை உதயமானது. லோஹித்தின் கார் வரவே தன் பொருட்களை எடுத்துக் கொண்டு அவள் புறப்பட்டாள். ஏர்போட்டுக்கு சென்றவள் லோஹித்துடன் இணைய இருவரும் விமானத்தில் ஏறினர். வாழ்வில் முதல் முறையாக விமானத்தின் உட்பகுதியைக் கண்டாள் மிஹிக்கா. இருவரும் அருகருகே அமர்ந்து கொண்டனர். விமானத்தில் இருந்த ஏர் ஹொஸ்ட்ரஸ் சில விளக்கங்கள் கொடுத்ததை கவனித்துக் கொண்டாள். விமானம் புறப்பட்டது. மெல்ல மெல்ல ஆகாயத்தை நோக்கி எழும் பொழுது இவள் கொஞ்சம் பதற்றம் கொண்டாள். பயந்தவள் லோஹித்தின் கையைப் பற்றினாள்.
இவளது பயத்தை அவளின் கை தொடுகையிலேயே தெரிந்தது லோஹித்துக்கு. அவளை கையைத் தட்டி அவளை ஆசுவாசப்படுத்தினான். பின்னர் அவர்கள் இருவரும் தன் இருப்பிடத்தை சில மணி நேரங்களில் அடைந்தனர். பின்னர் லோஹித்தின் வீட்டில் அவர்கள் இருவரும் தங்கினர். பின்னர் இருவரும் கலைப்பில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் போய் உறங்கினர். வேறு வேறு அறைகளில் தான்.
உணவருந்தி படுத்த உடனே தூங்கிப் போனார்கள். காலை ஏழு மணியிருக்கும். மிஹிக்கா எழுந்தாள். எழுந்தவள் சோம்பல் முறிக்கையில் காப்பியுடன் லோஹித் வந்தான். குட் மோர்னிங் என மிஹிக்கா சிரிக்க குட் மோர்னிங் என லோஹித் காப்பியை நீட்டினான். ஜன்னல் வழியே வெளியே பார்த்தவள் சந்தோஷம் கூடிய ஆச்சரியத்துடன் பார்த்தாள்.
நீல நிறக் கடல். மிக ரம்மியமான காட்சி. அலைகள் ஒவ்வொன்றும் கரையுடன் மோதி விளையாடின. பிரேசில்லயா இருக்கோம் என அவள் கேட்க புன்னகைத்தான் லோஹித். இல்ல மிஹிக்கா இன்னைக்கு நம்ம மியுசிக்கல் ஷோ இங்க தான் இருக்கு ஈவ்னிங். அதைக் கேட்ட மறுகணம் அப்போ நாம இருக்கது புவெர்ட்டோ ரிக்கோலயா என கேட்க புன்னகைத்தபடி ஆம் என பொருள்பட தலையசைத்தான் லோஹித்.
அவள் கையை மென்மையாக பிடித்தபடி காரிடோருக்கு கூட்டிச் சென்ற லோஹித் அதோ பாரு அங்க தான் நம்ம கான்சர்ட் நடக்க போகுது. ஆச தீர என்ஜாய் பண்ணலாம் என சொன்னான். அப்போ வர்க் மேற்படிப்பு என மிஹிக்கா கேட்க. எல்லாம் ரெடியா இருக்கு. இன்னைக்கு நல்லா என் ஜாய் பண்ணு எல்லாம் செஞ்சிடலாம் என சொன்னவன் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு சைட்ல. அரேஞ்மண்ட்ஸ் பாக்கனும் நீ ரெடியாகி சரியா பகல் 12 மணிக்கு வா. நம்ம கார் இருக்கு கூட்டி வருவாங்க. ஓகே தானே என அவன் சொல்ல. சரியென தலையாட்டினாள்.