ப்ளேக் ரோஸ் பாகம் - 3

30 2 5
                                    

இன்று...

இன்னுமா ஒங்களுக்கு இந்த கனவு வருது? என டாக்டர் பூஜா கேட்க. ஆமா டாக்டர் விசித்திரமான கனவுகள் என்ன துன்புறுத்துது, அவ முகம் ஒவ்வொரு விதமா கனவுல வந்து போகுது என சொல்லி பதற்றமாக க்ளாஸில் இருந்த நீரை மடமடவென கடைசி சொட்டு வரை குடித்து விட்டு பெருமூச்சு விட்டான். நீங்க ஒழுங்கா மாத்திரை போட்டா தானே இந்த பிரச்சினை தீரும் உங்களோட மாத்திரை மெடிசின் எதையும் நீங்க டைம்கு எடுக்கறதில்ல நிறைய வாட்டி நீங்க மாத்திரை வேளைகளையெல்லாம் மிஸ் பண்றீங்க அதான் மிஸ்டர் மிஹிர் இந்த பிரச்சினை ஒரு மாசம் ரெஸ்ட் எடுங்க. அதுக்கு அப்ரம் நீங்க உங்க கெரியர தொடரலாம் இதான் உங்க லிமிட் இது தாண்டினா உங்க நிலைமைகள் மோசமாயிடும். அப்ரம் கஷ்டம் உங்க கெரியர தான் இது பாதிக்கும் என பூஜா சொல்ல சரி டாக்டர் நா ஒரு  மாசம் டர்க்கி போறேன் எனக்கு கொஞ்சம் மன நிம்மதி கிடைக்கும் என சொல்ல.

க்ரேட் கொஞ்சம் எங்கயாச்சும் போயிட்டு வாங்க. தூக்கம் கண்டிப்பா தேவை. அப்ரம் ஒழுங்கா மெடிஸின் எடுங்க. உங்களுக்கு எல்லாம் சரியாகும். அப்ரம் இந்த கெட்ட வினோதமான கனவுகள் நீங்க உங்க மைண்ட்செட்ட மாத்திக்கிட்டா தான் சரியாகும். கொஞ்சம் டைம் போக போக தான் இது சரி வரும் என சொல்ல. விடை பெற்றான் மிஹிர்.

வீட்டுக்கு வந்தவன் ஒரு சாயும் நாட்காலியில் சாய்ந்தான். எதோ நியாபகம் வந்தவன் போல் நேரத்தை பார்த்தான். மணி  8 எனச் சுட்டியது கடிகாரம்.  மருந்தை குடித்தவன் சாப்பிட்டு விட்டு சாப்பாட்டுக்கு பின் எடுக்க வேண்டிய மருந்துகளை மீண்டும் குடித்து விட்டு கட்டிலில் படுத்தான். நன்றாக தூங்கிப் போனான். அப்பொழுது அவனது அயர்ந்த ஆழ்நிலை தூக்கத்தில் அவனுக்கு ஒரு கனவு வந்தது.

ஒரு அழகான பூந்தோட்டம். அங்கு  ஒரு பெண் பிள்ளை தங்க நிறத்தில் ஒரு அழகிய லெஹெங்கா அணிந்திருந்தாள். வயது ஒரு பத்து இருக்கும். அவள் ஊஞ்சலாடி விளையாடிக் கொண்டிருந்தாள். பின் இவனைக் கண்டதும் அப்பா என செல்லக் குரலில் கத்தி கூப்பிட்டு அவனை நோக்கி ஓடி வந்தாள். அவள் ஓடி வருகையில் அவள் காலில் கட்டியிருந்த கொலுசுகளும் அழகாக இசை பாடின.

Black Rose | கறுப்பு ரோஜாTempat cerita menjadi hidup. Temukan sekarang