கைதி - அத்தியாயம் 6

79 8 1
                                    

அன்றைய காலை பல்வேறு திருப்பங்களைத் தர விடிந்தது.

ஆண்கள் அனைவரும் ஹாலில் கூடியிருக்க அங்கு வந்த அக்ஷரா,

"சீனியர்ஸ்... இன்னிக்கி என்ன ப்ளேன்.." எனக் கேட்டாள்.

ஆதர்ஷ், "முதல்ல பைகாரா வாட்டர்ஃபால் போலாம்னு இருக்கோம் அக்ஷு... அதுக்கப்புறம் மத்த ப்ளேஸஸ் விசிட் பண்ணிட்டு நைட் ஒன்பது பத்து மணிக்கெல்லாம் இங்க வந்துருவோம்.. நீ போய் கர்ள்ஸ் எல்லாரையும் சீக்கிரம் ரெடி ஆகி கீழ வர சொல்லு.." என்க அக்ஷரா சரி என்று விட்டு சென்றாள்.

அனைவரும் தயாராகி கீழே வர சிதாரா, லாவண்யா, அக்ஷரா மட்டும் இன்னும் வராமல் இருந்தனர்.

அபினவ் ஆதர்ஷிடம், "இதுங்க இன்னும் வராம என்ன பண்ணுதுங்க.. ஆல்ரெடி ரொம்ப லேட் ஆகிடுச்சி.. இப்பவே போனா தான் கரக்ட் டைம்ல எல்லாம் பாத்துட்டு வந்துர முடியும்.." என்க ஆர்யான் தான் பார்த்து விட்டு வருவதாக கூறி மேலே சென்றான்.

பிரணவ் மனதில், "ஆமா இவரு போலன்னா அவங்க கீழ வர மாட்டாங்க.. ரொம்பத்தான் பண்றான்.. எப்ப பாரு தாரா கூடவே சுத்திட்டு இருக்கான்.." என ஆர்யானை வருத்தெடுத்துக் கொண்டிருந்தான்.

மேலே அறையில், "ப்ளீஸ் சித்து.. இதுக்காக தான் வந்தியா.. ஓக்கேனு சொல்லேன்.." என அக்ஷரா சிதாராவிடம் கெஞ்சிக் கொண்டிருக்க அங்கு வந்த ஆர்யான்,

"என்னாச்சி கர்ள்ஸ்.. ஏன் இன்னும் கீழ வரல மூணு பேரும்.." எனக் கேட்டான்.

"நீங்களே கேளுங்கண்ணா.. இவ்வளோ கஷ்டப்பட்டு பேரன்ட்ஸ சம்மதிக்க வெச்சி டூர் வந்தா இவ என்னன்னா வர மாட்டாளாம்.. எங்கள மட்டும் போக சொல்றா.." என லாவண்யா கூற சிதாராவை கேள்வியாய் ஏறிட்டான் ஆர்யான்.

சிதாரா, "இல்லடா காலைல எந்திரிச்சத்துல இருந்து மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு... அந்த ஃபீல எப்படி சொல்லன்னு தெரியல... அதான் நான் இன்னெக்கி இங்கயே இருக்கேன்னு இவங்க ரெண்டு பேரையுப் போய்ட்டு வர சொல்லிட்டு இருந்தேன்.." என்க,

உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே... (முடிவுற்றது)Onde histórias criam vida. Descubra agora