"மச்சான் மச்சான் மச்சான் அவ்ளோ தா... அவ்ளோ தான் தா.. வந்துட்டோம் டா வந்துட்டோம் டா... மாட்டுனா அவன்... இன்னைக்கு காலி டா நீ... சேத்த டா மவனே.."
ஆளுக்கு ஒரு மொபைலை வைத்துகொண்டு, பக்கத்தில் வைத்த கண்ணை எடுக்காமல் இவர்களையே பார்த்தவாறு ஒன்றும் புரியாமல் அமர்ந்திருக்கும் பாட்டியம்மா வள்ளியை கூட கவனிக்காமல் கத்தி கொண்டிருந்தார்கள் இருவரும்.
யாரேனும் சாதாரணமாக பார்த்தால் பப்ஜி பைத்தியங்கள் என்று முத்திரையே குத்தி விடுவார்கள்... அந்த விளையாட்டு பேன் (ban) செய்து விட்டார்கள் என்பது தெரிந்தவர்கள், "அப்டி என்னத்த தா விளையாண்டு தொலைக்கிறானுங்க", என சற்று முன்னேறி மொபைலை எட்டி பார்த்தால்...., "பப்ஜி மாதிரியே ஏதோ புது கேம் போல... இவனுங்களுக்கு இது தா வேலையே..", என தலையில் அடித்து கொண்டு சென்று விடுவார்கள்...
ஆனால் இந்த இரு சேட்டை கில்லாடிகள் செய்யும் வேலை என்ன என்பதை அவர்கள் தானே அறிவார்கள்...
"ஹேஏஏஏஏஏ... சக்சஸ்ஸ்ஸ்ஸ்.....", இருவரின் உற்சாக குரல் வீட்டை நிரப்ப.. ஒருவரின் தோளோடு ஒருவர் மோதி... கைகள் இரண்டையும் மாற்றி மாற்றி அடித்து கொண்டு உற்சாகத்தை வெளிப்படுத்தி கொண்டார்கள் நம் இரு நாயகன்கள்.
அப்படி அந்த மொபைலில் என்ன தான் இருந்தது??.. எதை சாதித்தார்கள்?.. ஏன் இந்த உற்சாகம்??... விடையறிய விரைவில் இணையுங்கள் இந்த டெக்னோ கில்லாடிகளுடன்.."
¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra.
Genere : crime & thriller Started : soon... Ended. : --/--/----.