Ep 1: " நண்பர்கள் "

19 0 0
                                    

ராஜு எவ்ளோ சொல்லியும் கேட்காம செந்தில் கார விளையாட்டுக்கு வளைச்சு வளைச்சு ஓட்டுனது நால ஒரு மணல் மேடுல முட்டி கார் ஆக்சிடென்ட் ஆயிடுசு.. நல்ல வேல உள்ள இருந்த யாருக்கும் காயம் படல...

ராஜு கோவமா " உனக்கு எத்தன தடவ சொன்னேன் கார இப்படி ஓட்டாத ஓட்டதா nu இப்போ பாரு ..என்ன ஆகிருக்கு" nu சொல்லிட்டு இருக்கும் போதே ....செந்தில் சிரிச்சிட்டே கார் ah விட்டு இறங்கி என்ன ஆச்சுன்னு பாக்குறான் ...

கார்க்கு முன்னாடி செம்ம அடி... திருப்பியும் உள்ள வந்து ஸ்டார்ட் பண்ண பாக்குறான் ஆனா வண்டி மூவே ஆகல....
மீனா ...என்ன ஆச்சு செந்தில்... ஏன் வண்டி எடுக்க மாட்டிக்கு nu கேட்க....
செந்தில் : "வண்டி போச்சு மோதுனதுல ... மெக்கானிக் ah கூப்டு ரெடி பண்ணிரலாம்.. வாங்க அதுவர எல்லாரும் வெளிய நிப்போம்" nu செந்தில் சொல்ல ... மீனா, செந்தில்,ராஜு,நான்சி, மணி எல்லாரும் கார விட்டு இறங்கிராங்க..

ராஜு தனியா போய் சிகரட்ட எடுக்க நான்சி ஒரே தட்டு... "என் கிட்ட நீ இதெல்லாம் விட்ருவ nu சொன்ன " கொஞ்சோம் கோவமா சொல்றா....

ராஜு : " சரி அத விடு...இப்போ நாம எப்படி மலைக்கு மேல உள்ள ஹோட்டல்க்கு போறது... மெக்கானிக் வரலாம் நேரம் அதிகமா ஆகிரும் ..உன் பிறந்த நாளுக்கு போட்ட பிளான் எல்லாம் நடக்காம போகிருமோ nu தோணுது" nu சொல்லிட்டு இருக்கான்..

[ இந்த செந்தில், ராஜு, மீனா,நான்சி நாலு பேரும் ஒரே காலேஜ்ல MBA பண்றாங்க... லீவ் ல வெளில போலாம் nu இந்த hillstation ku வந்துருக்காங்க அதுவும் நான்சி ஓட பர்த்டேக்கு ... மணி மீனா ஓட தம்பி இப்போ தான் 12th complete பண்ணிருக்கான் அவனையும் கூட்டிட்டு வந்திருக்காங்க]

ராஜு சொல்றத கேட்ட மீனா... "ஆமா நாம ரெண்டு பேரும் காதலிக்க ஆரமிச்சு மூணு வாரம் கூட முழுசா ஆகால....அதுக்குள்ள பர்த்டே சர்ப்ரைஸ் ah "

இப்படி பேசிட்டு இருக்கும் போதே செந்தில் வந்து... ஃபோன் ல டவர் இல்ல... மீனா ஃபோன் லையும் பாத்துட்டேன்...வேற வழியே இல்ல... நாம வேற யாராச்சும் இந்த ரூட் ல போன அவங்க கிட்ட தான் உதவி கேட்கனும் nu சொல்றான்"
ராஜு: " இந்த ரூட் ல ட்ராஃபிக் இருக்காது nu தான் இந்த வழியா வந்தோம்...இந்த பக்கம் யாருடா வருவா" nu கத்த
மீனா உள்ள வந்து....சரி ஆனது ஆச்சு...வெயிட் பண்ணுவோம் ... ராஜுவ
சமாதானம் படுத்துறா....

இந்த அஞ்சு பேரும் வெயிட் பண்றாங்க ...ஆனா ஒரு வண்டி கூட அந்த பக்கம் வரல.. மதியம் தாண்டி சாய்ங்காலம் வந்துருச்சு.. இன்னும் விட்டா இருட்டாகிறும் அதும் இந்த பகுதி காட்டு பகுதி ... நைட் ஏதாவது மிருகம் வந்தா நம்மளால ஒன்னும் பண்ண முடியாது...எங்காவது வீடு இருக்க nu பாப்போம் ..நடங்கடா அயோக்கிய ராஸ்கல்களா nu மீனா சொல்ல....

செந்தில் நாம ஏன் முன்னாடி போகாம வந்த வழில போய் பாக்க கூடாது...அங்க ஏதாச்சும் வீடு இருந்தா நைட் அங்க தங்கிகலாம்.. எனக்கு கூட ஒரு வீட பாத்த மாதிரி ஞாபகம் இருக்கு... வாங்க போலாம் nu சொல்றான்...

ராஜுக்கும் வேற வழி இல்லாம .ஒன்னும் பேசாம செந்தில் சொன்னதுக்கு சரி nu சொல்றான்...
அந்த அஞ்சு நண்பர்களும் நடக்க ஆரமிக்காங்க... நல்லா மழை வேற பெய்யுது..ஒரு வழியா நனஞ்சுகிட்டே அந்த வீட்டுக்கு நாற்பது நிமிஷத்துல வந்துறாங்க

பெரியவர் அடைக்கலம்Where stories live. Discover now