அந்த வீடு ரொம்ப பெருசும் இல்ல குட்டியும் இல்ல... பாக்க அழகா இருக்கு.. ஓட்டு வீடு தான் , புகை வெளில போக மேல புகை கூண்டு (சிம்னி) இருக்கு...வீட்டுக்கு முன்னாடி ஒரு 15 அடி தூரத்துக்கு புல் வெளி அடுத்து மரக்கட்ட வேலி...அந்த வேலி மாதிரியே கதவு இருக்கு.... இந்த வீட்டுக்கு அந்த அஞ்சு நண்பர்கள் வந்துராங்க
மழை இன்னும் முழுசா விடல .... அந்த வேலிக்கு வெளில நின்னு ராஜு... சர்...அய்யா .. ஹலோ...nu கத்துறான்... ஆனா வீட்டுல இருந்து யாருமே வரல.... அந்த வீடுக்குள்ள யாருமே இருக்குற மாதிரி தெரில...
மீனா அந்த வேலி கதவ திறந்து...வாங்க மழைல நனையாம இருக்க அந்த வீட்டுக்கு கீழ இருப்போம் nu சொல்ல.... அந்த அஞ்சு பெரும்... ஓட்டுக்கு கீழ மழைக்கு ஒதுங்கி நிக்காங்க...
செந்தில் அந்த வீட்ட பாக்குறான்.... அந்த வீடு இன்னும் பயன்பாட்டுல தான் இருக்குனு புரிஞ்சுக்குறான்...
கொஞ்ச நேரத்துல ...ஒரு வண்டி ஆரன் சத்தம் கேட்குது...ஒரு டிராக்டர் அந்த திறந்து இருக்குற வேலி வழியா அந்த வீட்டுக்கு முன்னாடி வருதுராஜு சார் சார் nu சொல்ல.... எதையும் கேட்காம அந்த டிராக்டர் ஓட்டியாந்த பெரியவரு ... டிராக்டர் ah விட்டு படார் nu இறங்குறாரு...
பாக்குறதுக்கு 70 வயசு மேல உள்ள மாதிரி தெரியுது. காதுல பணி போகாம இருக்க ....ஒரு தலப்பா கட்டி வெள்ள தாடி மீசையோட ஒல்லியான உருவம் ஸ்வெட்டர், வேட்டி nu இருக்காரு....
அவரு டிராக்டர் ah விட்டு இறங்கினதும் நொண்டிக்கிட்டே அந்த புல்லுல கிடந்த கம்ப எடுக்காரு... அவரால சரியா நடக்க முடியாது ...இருந்தாலும் அந்த கம்ப எடுத்து கோவாமா ...போ போ....போ nu ஆடு மாட விரட்டுற மாதிரி அந்த அஞ்சு பேரயும் பயமங்கரமா கத்திகிட்டே விரட்டுராரு
ராஜு...அய்யா அய்யா nu சொல்ல...அவனுக்கு...குச்சி நால உடம்புல அடி விழுது...
அப்போ ஒரு நடுத்தர வயசு பெண் ஒருதங்க ஏங்க ஏங்க nu அந்த வீட்டுக்கு சைட் ல இருந்து ஓடி வாரங்க....அவங்க அந்த பெரியவர் வச்சிருந்த குச்சிய புடிங்கி போட்டுட்டு..
இவங்க மழைக்கு ஒதுங்குன ஆளுங்க கொஞ்ச நேரத்துல பொய்டுவாங்க ...nu அந்த பெரியவர சமாதான படுத்துறாங்க.
அந்த பெரியவரும் அந்த பெண்ணும் வீட்டுக்குள்ள போறாராங்க...இப்படி மனநலம் பாதிக்க பட்ட மாதிரி
நடந்த பெரியவர பாத்து ரொம்பவே பயந்துடாங்க.. ஏன்டா இங்க வந்தோம் nu எல்லாரும் ஃபீல் பண்ண ஆரமிச்சுடாங்க...
சில நிமிஷங்களயே வானம் இருட்டிருச்சு..வீட்டுக்குள்ள போன அந்த பெண் வெளில வாராங்கா....
ВЫ ЧИТАЕТЕ
பெரியவர் அடைக்கலம்
Детектив / ТриллерA tamil thriller Story by Manikandan Jegadeesh . Not for soft hearted people..