கண்ணே கலைமானே part -6
Happy birthday kumaran 🎉💐🎉
கதிர் முல்லையின் கனவை நிறைவேற்ற என்ன செய்வது என்று பலத்த யோசனையில் இருந்தான்.
நாட்கள் மெதுவாக நகர இவர்களின் காதலும் காமமும் ஊடலும் கூடலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
கதிர் இடைப்பட்ட இந்த ஒரு மாத காலத்தில் முல்லை உனக்கு ஏதாவது ஆசை இருக்கா என்று கேள்வியை அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தான்.
ஆனால் முல்லையோ ஒருநாளும் தன் மனதுக்குள் இருக்கும் அந்த லட்சியத்தை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
அவள் அதை பற்றி பேசாமல் இருப்பதோ என்னவோ கதிரின் மனம் அதை மிகவும் விரைவாக வெளிக்கொண்டுவர வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தது.
கதிர் ஆபீஸ் சென்றிருக்கும் நேரத்தில் முல்லையின் பெயருக்கு ஒரு கடிதம் வர...
அதில் இருந்தது அமெரிக்காவில் நடக்கவிருக்கும் உலக அளவிலான புகைப்பட போட்டிக்கான அழைப்பிதழ்.
இதை யார் அனுப்பியது அதும் இந்த அட்ரஸ்க்கு.. அப்படி வந்தாலும் அப்பா வீட்டுக்கு தான வந்திருக்கனும் இங்கே எப்படி வந்துச்சு ஒருவேளை இது அப்பா வேலையா இருக்குமோ என முல்லை எண்ணிக்கொண்டு இருக்க..
அதே சமயம் கதிர் வீட்டுக்குள் நுழைய முல்லை செய்வதறியாது நின்றாள்.
அந்த அழைப்பிதழை தன் சேலையைக்குள் மறைத்து வைக்க அவள் ஏனோ தடுமாறுகிறாள் என்பதை உணர்ந்த கதிர்.
கதிர் : என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரி இருக்கே
முல்லை : அதெல்லாம் ஒன்னும் இல்ல உள்ள வாங்க நீங்க போய் பிரஷ் ஆகிட்டு வாங்க.. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.
கதிர் : சரி இரு வரேன்.
கதிர் தன் அறையில் உள்ள குளியலறைக்குள் செல்ல.... தனக்கு வந்த அழைப்பிதழை முல்லை கபோடில் ஒளிச்சு வைக்க சிறிது நேரத்திற்கு பிறகு கதிர் வர அனைவரும் உணவருந்தி முடிக்க..
YOU ARE READING
கண்ணே கலைமானே
General FictionKC as Km.. சிறிய கதையா தொடங்கிய இந்த கதை இப்பொழுது 15 பகுதி வரை வந்து நிற்கிறது ... இது மகளிர் தின சிறப்பு பதிவும் கூட... கதிர் முல்லை காதல் கதை.. பெண்ணாள் முடியாதது எதுவும் இல்லை...