கண்ணே கலைமானே part - 13
அறிவு : அப்பா இந்த online game PlayStation இதுல எல்லாம் விளையாடி போரடிக்குது பா புதுசா வித்தியாசமா ஏதாவது இருக்கா
அன்பு : புதுசுக்கு நான் எங்கடா போக.. நியூ வா எந்த கேம் வந்தாலும் உடனே உங்க தாத்தா பாட்டி வாங்கி கொடுத்துடுறாங்க எல்லாத்தையும் விளையாண்டு... முடிச்சுட்டு என்கிட்டே வந்து புதுசா எதாவது இருக்கான்னு கேட்குற
அறிவு : அப்பா கோச்சுக்காதப்பா.. சரி புதுசு வேணும் வேற ஏதாவது பழசு இருக்கா
அன்பு : பழசுக்கு நான் எங்கடா போவேன்
அறிவு : என்னப்பா.. எது கேட்டாலும் இல்ல இல்லைன்னு சொல்ற.. போப்பா நீ ரொம்ப மோசம்.. இதுவே தாத்தாவா இருந்தா நான் எது கேட்டாலும் உடனே எனக்கு வாங்கி கொடுத்து இருப்பாங்க..
அன்பு : அதுக்கு நான் என்னடா பண்ணுறது இருந்தா கொடுக்க மாட்டேனா
அறிவு : அப்பா நீ என்னப்பா வச்சு விளையாடின
அன்பு : நான்னெல்லாம் 90s kids da எனக்கெல்லாம் விளையாட அவ்ளோ பொருள் இருந்துச்சு
அறிவு : நிறைய இருந்துச்சா அதெல்லாம் எங்கப்பா
அன்பு : அதெல்லாம் இங்கதாண்டா எங்கேயாவது இருக்கும்... அம்மா பழசெல்லாம் தூக்கி போட கூடாதுன்னு சொல்லி எல்லாத்தையும் பத்திரமா எடுத்து வச்சிருப்பாங்க
அறிவு : அப்ப பாட்டி கிட்ட கேட்டா எனக்கு விளையாட பொருள் கிடைக்குமா.. அப்ப நா போய் பாட்டி கிட்ட கேட்கிறேன்
அன்பு : டேய் இருடா இருடா எங்க இவ்வளவு அவசரமா ஓடுற அம்மா இப்பதான் தல வலிக்குதுனு படுக்க போயிருக்காங்க.. அவங்களுக்கு போய் தொல்லை கொடுக்காதே..
அறிவு : அப்பறம் அந்த பொருள் எல்லாம் எப்படி எடுக்கிறது..
அன்பு : இருடா... இங்க தான் மேல எங்கயாவது இருக்கும்.. நானே எடுத்து தரேன்..
அன்பு அறிவு இருவரும் தங்கள் வீட்டின் பழைய பொருட்கள் அடிக்கி இருக்கும் இடத்தில் அன்பின் விளையாட்டு பொருட்கள் எங்கு இருக்கின்றன என்று தேடிக் கொண்டிருந்தனர்..
YOU ARE READING
கண்ணே கலைமானே
General FictionKC as Km.. சிறிய கதையா தொடங்கிய இந்த கதை இப்பொழுது 15 பகுதி வரை வந்து நிற்கிறது ... இது மகளிர் தின சிறப்பு பதிவும் கூட... கதிர் முல்லை காதல் கதை.. பெண்ணாள் முடியாதது எதுவும் இல்லை...