அந்தி மாலைப் பொழுதினிலே 1

18 2 4
                                    

வணக்கம் நான் உங்கள் நண்பன் இது என்னுடைய முதல் கதை தவறுகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும் இக்கதை ஒரு ஆண்மகனின் பிறப்பு முதல் இறப்பு வரையான வாழ்க்கையும் அவருடன் சேர்ந்த காதலியும் பற்றியது

தூங்கா நகரம் ,மல்லிகை நகரம் என்ற பல பெயர்கள் கொண்ட இனிமையான நாட்டின் தலைசிறந்த நகரம் மதுரை.

அதில் எங்கு பார்த்தாலும் பசுமை கொஞ்சம் எழில் மிகுந்த அழகிய கிராமம் பொருளாதாரத்தை நம்பி இல்லாமல் பொருள்களை உருவாக்கி நாம் அனைவரும் பசியார உழைத்திடும் உழவர்கள் நிறைந்த கிராமம்.

எங்கு பார்த்தாலும் தன்னால் எவ்வளவு சுமக்க முடியுமோ அவ்வளவு சுமக்கும் அழகிய தென்னை மரங்கள் நிறைந்த கிராமம்.எங்கு பார்த்தாலும் காலையும் மாலையும் பறவைகளின் இன்னிசை சத்தம் . நான்கு கால் உயிரினங்கள் தன் உழைப்பால் உழவனை உயர்த்திடும் கிராமம் இப்படி பல புகழுக்கு புகழ் கொண்ட கிராமத்தின் நம்மவன் பிறக்கிறான்.

தேவன் குரும்ப மால் என்ற பெற்றோர்களுக்கு இரண்டாவது மகனாக எழிலரசன் பிறக்கிறான். தன் குடும்பம் ஒரு நடுத்தர வர்க்கத்தை சார்ந்தது தந்தை ஒரு விவசாயம் சார்ந்த தொழிலை செய்துவந்தார்.

தாய் தன் பிள்ளைகளை பேணி காப்பதிலும் தன் குடும்பத்தை எப்பொழுதும் பேணி காப்பதிலும் சிறந்தவளாக இருந்தாள்.

நமது எழிலரசன் சிறுவயது முதலே சிறந்தவனாக துருதுருவென்று துள்ளிக்குதிக்கும் குழந்தையாக வளர ஆரம்பித்தான் . எழில் அரசனுக்கு எவ்வித குறையுமின்றி தன் பெற்றோர்களால் வளர்க்கப்பட்டார்.

தன் பள்ளிப் பருவ வயதினை அடைந்த பொழுது தன் ஊரிலேயே இருக்கும் ஒரு ஆரம்ப பள்ளியில் சேர்ந்து தன் முதல் நிலைக் கல்வியை கற்க ஆரம்பிக்கிறான் கல்வியில் சிறந்தவனாக விளையாட்டில் சிறந்தவராகவும் திகழும் எழிலரசன் எப்பொழுதும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் செல்லப்பிள்ளையாக இருந்தான்.

மெல்ல மெல்ல தன் கல்வி அறிவைப் பெற்றுக் கொண்டு முன்னேறி பள்ளிப் பருவ வயதினை அடைந்தான் அப்பொழுது தன் கிராமத்தை விட்டு வெளியே சென்று கல்வி கற்க முடிவு செய்தான் எழிலரசன் எப்பொழுதும் எளிமையாகவும் இனிமையாகவும் பழகக்கூடிய குணாதிசயத்தை கொண்டிருந்தான் .

அந்தி மாலைப் பொழுதினிலேOù les histoires vivent. Découvrez maintenant