தென்றல் எழிலரசியின் மீது காதல் வயப்பட்டு விட்டால் அவளது நினைவுகள் அனைத்தும் எழிலரசன்சுற்றியே வந்து கொண்டிருந்தது .
எழிலரசன் நினைவுகளால் நிறைந்திருந்தால் தென்றல் அங்கே எழிலரசு அதே நிலைமைதான் ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் எழிலரசன் கல்லூரியை விட்டு மருத்துவனாக வெளியே செல்லும் நேரம் வந்துவிட்டது அதை நினைத்து எழிலரசன் சற்று வருத்தமாக இருந்தான் ஆனால் தென்றல் தன்னுடைய வாழ்க்கையில் எப்போதும் வீசிக்கொண்டே இருக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தான்.
தென்றலும் எழில் அரசன் இன் வருகைக்காக காத்திருந்தாள் எப்பொழுது வருவான் எப்பொழுது பேசுவான் என்ற என்ன ஓட்டம் தென்றலுக்கு அதுவும் நடந்திடும் நாட்களும் வந்தன ஒரு அழகிய மாலை பொழுது மரங்கள் நிறைந்து புல்வெளிகள்மேல் அமைக்கப்பட்ட ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தாள் தென்றல் .
திடீரென்று காற்று அதிகமாக வீச ஆரம்பித்தது தென்றல் தன் உடைமைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு மெல்லத் திரும்பினாள் அங்கே எழிலரசன் தன்னை நோக்கி மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தான் இவள் எண்ண ஓட்டம் அந்த சாதாரண காற்று புயல் காற்று போல் தோன்றியது.
மனம் படபடத்தது எழிலரசன் நெருங்கிவர அவளது முகம் சிவக்க ஆரம்பித்தது தன் தலையை கீழே குனிந்து கொண்டாள் மெல்ல எழிலரசன் தென்றலின் அருகில் வந்து நின்றான்.
அவன் இதழ்கள் முதல் முறையாக தென்றல் என்ற வார்த்தையை உச்சரித்தது . தென்றல் வீசியது அவள் செவிகளில்.
மெல்ல மெல்ல நிமிர்ந்து பார்த்தாள் தென்றல். அவன் திடீரென்று அவள் முன் முட்டியிட்டு அவள் கரங்களை மெல்ல பற்றி தென்றல் உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது உன்னுடன் இந்த வாழ்க்கையை வாழ விரும்புகிறேன் நீ என் வாழ்க்கை தென்றலாக வந்தாலும் சரி புயலாக வந்தாலும் சரி இருவகையிலும் உன்னை நேசிப்பேன் எப்பொழுதும்.
என்னை ஏற்றுக் கொள்வாயா இன்று அவன் அவ கரங்களை பற்றி கேட்க அவள் கண்களில் ஒரு துளி நீர் வெளியே வந்து அவன் கரங்களில் பட இந்த வாழ்க்கை உன்னோடு தான் என்று கூறி முடித்தாள்.
CZYTASZ
அந்தி மாலைப் பொழுதினிலே
General Fictionஒரு அழகிய இதயம் கொண்ட ஆண்மகன் வாழ்க்கை மற்றும் காதல்