❣️ விதி - 01 ❣️

61 5 2
                                    


அன்றிரவு ரோஷினியின் வீடெல்லாம் தடல்புடலாக வேலை. நாளைக்கு எந்தவொரு குறையும் நடந்துவிடக்கூடாது என்று அவளது அம்மா பிரவீனா வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள். ஒரே ஒரு புதல்வியான ரோஷினியின் விஷேசமல்லவா அது?? பல எதிர்ப்பார்ப்புகளோடு, பல ஆசைகளோடு தன் மகளின் மகிழ்ச்சியை தங்களது மகிழ்ச்சியாக கருதிக் கொண்டு, அழைப்பு வந்து 10நிமிடங்கள் கூட இல்லையே. எல்லாம் அவசரத்தில் எப்படி ஏற்பாடு செய்வது?? என்று தலை கால் விளங்காமலும் தான். கடைக்கு போவதென்றாலும் ரோஷினியின் அம்மா தான் சென்றாக வேண்டும் என்ற கட்டுப்பாடு என்றிருக்க, சற்றே மனதில் கவலையும் குடிக்கொண்டது. தனக்கும் இதே போன்ற காலம் இருந்தது என்று கடந்தகாலத்தை நினைக்கையில் சற்றே கண்களும் கலங்கத்தான் செய்தது. கண்ணை துடைத்துக் கொண்டு வேலையில் ஈடுபட்டாள் பிரவீனா. நாளைக்கு தன் துணைக்காக தன் தங்கையையும், மைத்துனரையும் அழைத்தார் பிரவீனா.

ரோஷினி தன் காதல் ஜெயிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் சந்தோசமாக வானில் பறந்து கொண்டு இருந்தாள். அவளுக்கும் பெரிதாக வயதுமில்லை. இன்னும் சின்ன பிள்ளையாகவே பிரவீனா ரோஷினியை வளர்த்திருந்தாள். எத்தனையோ வரன்கள், எத்தனையோ மனிதர்கள் ரோஷினி தலை நிமிர்ந்து ஆணின் வர்க்கத்தையை பார்க்காதவள் கடவுளின் விதியால் ஆதவ்வை கண்டு மனதை பறிகொடுத்தாள். பிறகு நட்பு காதலாக மாறி இன்று பெண் பார்க்கும் படலத்தில் வந்திருக்கிறது என்று எண்ணுகையில் பாதி ஜெயித்த சந்தோசம் அவளை வந்தடைந்தது.

காலத்தோடு காதலும் பொறுமையோடு செல்ல, நாளை மாலை ரோஷினியை பெண்பார்க்க ஆதவ்வின் வீட்டிலிருந்து வருவதாக அழைப்பு ரோஷினியின் அம்மாவுக்கு வந்தது.
தங்கள் காதல் ஜெயிக்கும் வரை ஓரிரு வருடங்கள் பல வரன்கள் அவளை தேடி வந்தாலும் ஆதவ்வை தவிர வேறு ஒருவனையும் தன் கணவனாக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று பல தடவைகள் தன் அம்மாவோடும், மற்றைய உறவினர்களோடும் சண்டையிட்டு, பல இன்னல்களையும் இருவரும் சேர்ந்து சமாளித்ததுமுண்டு. சுற்றி இருப்போர்களுக்கும், உறவினர்களும் வேணுமென்றும், ஏன் ரோஷினியின் மீதான இரக்கத்தாலும் கல்யாணம் எப்போ?? எப்போ பார்க்க வாராங்கலாம்?? வந்தால் மோதிரம் போட்டு போனால் நல்லமே. அவள் மனசுக்கு எல்லாம் நல்லதா நடக்கும் என்றும் நேர், எதிர் கருத்துக்களை கூறி ரோஷினியின் தாயின் தலையை குழம்பியது. ஆனால் தன் மகள் இதுவரை கேட்ட எதையுமே கொடுக்காமல் இல்லை. அதனால் அந்த பையனை என்ன பிரச்சினை வந்தாலும் சேர்த்து வைப்பதாக மனதால் நினைத்துக் கொண்டார்.

விதியே, நீ மாறாயோ??? (On Hold) Where stories live. Discover now