டேய் சும்மா இருங்கடா அந்தப் புள்ளை மச்சான்னு கூப்பிடச் சொன்னால் அண்ணன்னு கூப்பிடுவாள் அவளைப் போயி என் ஆளுனுட்டு என்ற மதனிடம் அப்போ நான் ட்ரை பண்றேனே பங்கு என்றான் ரவி. உன்னால முடிஞ்சா ட்ரை பண்ணு என்ற மதன் அவனது அம்மா ரஞ்சனி அழைத்திட அங்கு சென்றான்.
பாப்பா என்ன இங்கே நிற்கிற என்ற பிரதீபனிடம் அண்ணா ஐஸ் வண்டி என்றாள் நிலவேனில். சரி வா என்று தங்கையை அழைத்துச் சென்று ஐஸ் வாங்கிக் கொடுத்தவனின் மொபைல் போன் ஒலிக்க பிருந்தா என்ற பெயரைப் பார்த்தவள் என்ன அண்ணா அண்ணியா என்றிட கலகலவென சிரித்த பிரதீபன் பிருந்தா உனக்கு அண்ணியா என்ன பாப்பா காமெடி பண்ணுற என்று சிரித்தவன் அவள் எனக்கு நல்ல ப்ரண்ட் அவ்வளவு தான் என்ற பிரதீபன் சிரித்தபடி போனை அட்டன் செய்தான்.
என்னடா ஒரே சிரிப்பு என்ற பிருந்தாவிடம் நாம இரண்டு பேரும் லவ்வர்ஸாம்டி என் பாப்பா சொல்லுது என்றான் பிரதீபன். என் தம்பியும் அதே தான்டா கேட்டான் என்று பிருந்தாவும் சிரித்திட அவர்கள் பேசட்டும் என்று நிலவேனில் தனியே ஓரிடத்தில் நின்றாள்.
ஹாய் என்ற குரலில் திரும்பினாள் நிலவேனில். அவள் முன் நல்லா வாட்டசாட்டமான இளைஞன் ஒருவன் நின்றான். என்ன என்றவளிடம் நான் ரவிவர்மன் என்றான். சரி என்றவளிடம் மதனோட ப்ரண்ட் என்றான். சரி அதை என்கிட்ட ஏன் சொல்றிங்க அண்ணா மதன் அண்ணா அங்கே இருக்காங்க என்றவளிடம் அட ஏம்மா நீ என்னை அண்ணன்னு சொல்லுற என்றவன் ப்ளீஸ் அப்படி மட்டும் சொல்லாதே என்றான்.
ஏன் என்றவளிடம் சொல்லாதம்மா ப்ளீஸ் போடா, வாடானு கூட கூப்பிடு அண்ணானு மட்டும் கூப்பிடாதே என்றவன் சென்று விட்டான். சரியான லூசுப் பையன் போல என்று நினைத்தவள் அமைதியாக நடந்து கொண்டிருந்தாள்.
என்னடா பேசுனியா என்ன சொன்னாள் என்ற மதனிடம் அண்ணன்னு சொல்லிருச்சுடா அந்தப் பிள்ளை என்றான் ரவி. மச்சான் அண்ணனாம்டா என்ற நண்பர்கள் கிண்டல் செய்ய இனிமேல் அப்படி கூப்பிடக் கூடாதுனு சொல்லிட்டு வந்துருக்கேன் என்றான். நண்பர்கள் சிரித்து விட்டு சரி வாங்க சாப்பிடலாம் என்று கிளம்பினர்.