நண்பர்கள் நால்வரும் சந்தோசமாக கேண்டீன் சென்றிட அங்கு நம் தோழிகளும் வந்திருந்தனர். என்னடி இவனுங்க நாம போற எல்லா இடத்திற்கும் வந்து நிற்கிறானுங்க என்ற கீர்த்தியிடம் இன்ட்ரவல் பெல் காமன் தானே பசங்க என்ன பொண்ணுங்க என்ன நாங்களும் கேண்டீன் தான் வந்தோம் அப்படியே இவங்களை பாலோவ் பண்ணிட்டு வரதா நினைப்பு இந்த அம்மா பெரிய கிளியோபாட்ரா என்றான் பிரசாந்த். டேய் பன்னி உன் பல்லை உடைச்சுருவேன் ஆமான்டா நான் கிளியோபாட்ரா தான் என்ன உனக்கு நீ என்ன மார்க்ஆண்டனியாடா பன்னி மூடிகிட்டு போயிரு இல்லை பல்லை உடைச்சுருவேன் என்றாள் கீர்த்தனா.
ஏய் கீக்கீ என்னடி இது என்ற நிலவேனிலிடம் பின்ன என்ன பப்பி இந்த பன்னி எப்போ பாரு முந்திரிகொட்டை மாதிரி என்றாள் பிரசாந்தை முறைத்துக் கொண்டே. பிரசாந்த் ஏதோ கூற வர பிரசாந்த் ப்ளீஸ் என்றாள் அபி. ஏய் வாயாடி நீயும் வாயை மூடு என்று கீர்த்தனாவையும் அடக்கினாள் அபி.
கேண்டீனில் அவரவர் தேவையான சமோசா, வடையை வாங்கிக் கொண்டு கிளம்பினர். ஏன்டி எப்போ பாரு அவன் கிட்ட வம்பு பண்ணிட்டே இருக்க என்றாள் அபி. இல்லைடி அவன் தானே என்ற கீர்த்தியிடம் கீக்கீ ப்ளீஸ் டோண்ட் ஆர்கியூ உன் மேல தான் தப்பு நீ தான பர்ஸ்ட் சொன்ன எங்கே போனாலும் பாலோவ் பண்றாங்கனு இன்டர்வல் டைம்ல வர எல்லோரும் நம்மளை பாலோவ் பண்ணுறானுங்கனு அர்த்தமா என்றாள் அபி. சாரி அப்பு என்ற கீர்த்தனாவிடம் விடு கீக்கீ அப்பு நீயும் விடு எல்லாம் என்னால தான் என்றாள் நிலவேனில். ஏய் பப்பி நீ என்ன சொல்லுற என்ற அபியிடம் இல்லை அப்பு துருவன் என்னை லவ் பண்ணுறதால தானே கீக்கீயும் அப்படி சொன்னாள் என்றாள் நிலவேனில். லூசு இவள் வேற என்ற கீர்த்தி பப்பிக்குட்டி நீ டல்லான அசிங்கமா இருக்க என்றதும் ஆனாலும் அந்த பிரசாந்துக்கு ரொம்பத் திமிருடி என்றாள் நிலவேனில். ஆமாம் பப்பி அந்த பன்னிக்கு திமிரு என்றாள் கீர்த்தனா. என்ன டேஸ்ட் அவனுக்கு போயும் போயும் இந்த மூஞ்சியை எல்லாம் கிளியோபாட்ரானு சொல்றானே அவன் கண்ணு என்ன நொள்ளைக்கண்ணா ஒரு வடிவேலு லேடீஸ் வெர்சன்னு சொல்லிருக்கலாம் என்று நிலவேனில் கூறியதும் அடியே வெள்ளப் பன்னி உன்னை என்று அவளை அடிக்கத் துரத்தினாள் கீர்த்தனா.