நிலவேனில் ஹலோ என்றிட அந்த பக்கம் நிலா என்ற ஆண்குரலில் அதிர்ந்தவள் யாரு என்றிட நான் தான் துருவன் என்றான். அவளுக்கு சப்தநாடியும் ஒடுங்கி விட்டது. அதுவும் அவளது அத்தை சரஸ்வதி வந்திருக்கும் இந்த நேரத்திலா இவன் போன் செய்திட வேண்டும் தப்பித் தவறி ஒரு ஆம்பளைப் பையன் தனக்கு போன் செய்து பேசுகிறான் என்பது மட்டும் சரஸ்வதிக்கு தெரிந்தால் இந்த வீடே இரண்டாக பெயர்ந்து விழும் அளவிற்கு பேசி பேசி என்னோட படிப்பை நிறுத்திட்டு அது மகனுக்கு எப்படியாவது என்னை கல்யாணம் பண்ணி வச்சுருமே என்று நினைத்தவள் பயந்து கொண்டே உனக்கு என் நம்பர் எப்படி கிடைச்சது என்றாள். உன் நம்பர் கண்டுபிடிக்கிறது பெரிய விசயமா என்ன என்றவன் உனக்கு இப்போ எப்படி இருக்கு ஹாஸ்பிடல் போனியா என்றான். உனக்கு எதுக்கு அதெல்லாம் போனை வை என்றவளிடம் நான் தான் உன்னை பந்தை வைத்து அடிச்சேன் அப்போ நான் தானே நலம் விசாரிக்கனும் என்றான். டேய் என் சூழ்நிலை தெரியாமல் பேசிகிட்டு போனை வைடா பன்னி என்றவளிடம் ஏய் ப்ளீஸ்ப்பா உனக்கு இப்போ பரவாயில்லையானு மட்டும் சொல்லிட்டுப் போப்பா என்றவனிடம் நாளைக்கு தான் ஸ்கூல் வருவேன்ல அப்போ பார்த்து தெரிஞ்சுக்கோ இப்போ தயவுசெய்து போனை வை என்றவள் போனை கட் செய்தாள்.
என்ன இவள் போனை வச்சுட்டாளே சரியான ராட்சசி என்று நினைத்தவன் இப்படி பயந்து சாவுறாளே என்னை லவ் பண்ணுவாளா என்று நினைத்தவன் எல்லாம் பண்ணுவாள் எங்கே போயிருவாள் என்னை விட்டுட்டு என்று நினைத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்று தன்னவளைப் பற்றிய நினைவிலே இருந்தான். அவனது மனம் முழுக்க அவளது வீங்கிய முகம் தான் இருந்தது. ஒரே நாளில் எப்படி வீக்கம் வத்தும் ஐயோ பாவம் என் செல்லம் என்று அவளுக்காக வருந்தினான்.
என்னடா இது தொல்லை இவனுக்கு எப்படி நம்ம வீட்டு போன் நம்பர் கிடைச்சுருக்கும். யார் கொடுத்தாங்க என்று யோசித்துக் கொண்டு இருந்தவள் அம்மு என்ற அன்னையின் குரலில் இதோ வந்துட்டேன் அம்மா என்று ஓடிச் சென்றாள்.